தமிழகம்

தமிழகம்

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த இயக்குநர் தாமிரா காலமானார்

கொரோனா பரவல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் தமிரா சிகிச்சை பலனின்றி காலமானார். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் மட்டும் நாடு முழுவதும் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,73,13,163 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரொனா பாதிப்பின் எண்ணிக்கை நேற்றைய தினத்தில் 15 ஆயிரத்தைக் கடந்தது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. தற்போது இயக்குநர் தாமிரா கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 'ரெட்டைச் சுழி', 'ஆண் தேவதை' படங்களை இயக்கியவர் இயக்குநர் தாமிரா. 53 வயதாகும் இவருக்குச் சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள மாயா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்....
தமிழகம்

மே 1ஆம் தேதி முதல் – அரசு அதிரடி அறிவிப்பு!

மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில் அதற்கு முன்பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாவிட்டால் தடுப்பூசி செலுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதலில் மருத்துவ பணியாளர்களுக்கும் அதனைத் தொடர்ந்து முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. அதன் பிறகு நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. வருகிற மே 1 ஆஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது . அப்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புபவர்கள் வலைதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம் . அதே நேரம் , 45 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகள்...
தமிழகம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி போலீசார் பாதுகாப்பு…!

அசம்பாவிதங்களை தவிர்க்க ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை 9:15 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், தூத்துக்குடியில் உள்ள தாமிர உருக்காலையான, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது குறித்து அனைத்து கட்சியினருடனும் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இதனையடுத்து, இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிராமண பாத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்...
தமிழகம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த தனது கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை – நடிகர் ரஜினிகாந்த்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்த தனது கருத்திற்கு எந்த ஆதாரமும் தன்னிடம் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, 13 பேர் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நீதி விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற தமிழக அரசு நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிடப்பட்டது. இந்த கமிஷன் சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. 27 கட்டமாக நடைபெற்ற விசாரணையில் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயம்பட்டவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், வழக்கறிஞர்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் என பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள வழக்கறிஞர் அருள் வடிவேல் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர்...
தமிழகம்

தமிழகத்தில் மே.1 முதல் இலவச தடுப்பூசி முகாம்கள்

தமிழகத்தில் மே.1 முதல் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 1 ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தம் பணி துவங்குகிறது.. இந்நிலையில் இன்று அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க , கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் மே 1-ம் தேதி முதல் அனைவருக்கும் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும். இதில் அனைத்து மார்க்கெட், தொழிலாளர்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆகியோருக்கும் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
தமிழகம்

கொரோனா சிகிச்சை மையங்களாக மாறும் கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள்!!

தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வுக்கூட்டத்துக்கு பிறகு அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா கவனிப்பு மையங்களின் எண்ணிக்கையை கடந்த ஆண்டைவிட கூடுதலாக உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் போன்றவற்றை மாவட்ட ஆட்சியர்கள் உரிய முறையை பின்பற்றி பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். தொற்று ஏற்பட்டவர் உடன் இருப்பவர்களை 72 மணி நேரத்திற்குள் கண்டறிந்து பரிசோதனை செய்ய வேண்டும் என ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தவும், மருந்துகள், பாதுகாப்பு கவசங்கள், ஆக்சிஜன் போன்றவற்றை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். கொரோனா கவனிப்பு மையங்களை பராமரிக்க முதற்கட்டமாக 61 கோடி ரூபாய்...
தமிழகம்

“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்

'மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு ஆலய வளாகத்திற்குள் வாகனகாட்சியாக நடைபெறும்' என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உலகப் பிரசித்திபெற்ற கள்ளழகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக இந்தாண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தில் திருவிழாவாக கொண்டாடாமால், வாகன காட்சியாக திருக்கோயில் வளாகத்திற்குள் நடைபெறவுள்ளது. அதேபோல, திருவிழா நடைபெறும் 23 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் விழாக்களில் சாமி புறப்பாடு, வாகனங்களில் எழுந்தருளுதல், கெருடசேவை, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தல், உள்ளிட்ட வைபவங்கள் ஏற்பாடுகளில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆலய வளாகத்திற்குள்ளே கள்ளழகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளுதல், ஆண்டாள் மாலை சாற்றுதல் உள்ளிட்ட அனைத்து விதமான திருவிழா ஏற்பாடுகளும் நடைபெறும். பக்தர்கள் தரிசனம் செய்யும்...
தமிழகம்

அதிரடி உத்தரவு! நகரங்கள், மாவட்டங்கள் இடையே பயணிக்க தடை!!

மகாராஷ்டிராவில் நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. மகாராஷ்டிராவில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் அம்மாநிலத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் மே 1ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 15 சதவிகித ஊழியர்களுடன் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்டுள்ள பிற அலுவலகங்களும் 15 சதவிகித ஊழியர்களுடன் செயல்படலாம். நகரங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் மருத்துவ அவசரம் , அத்தியாவசிய சேவைகள் , இறுதி சடங்குகள் ஆகியவற்றிற்கு மட்டும் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். புறநகர் ரயில் சேவைகளில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வோர் மட்டும் பயன்படுத்தலாம் என்றும் 50 சதவிகித இருக்கைகளுடன் இயக்கப்படவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. திருமணங்களில் அதிகபட்சம் 25 பேருக்கு...
தமிழகம்

தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது

தலைநகரான சென்னையில் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அண்ணா சாலை, காமராஜர் சாலை, உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அனைத்து மேம்பாலங்களும் அடைக்கப்பட்டிருந்தன. கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்கள் மூடப்பட்டன. பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பயணிகள் சிலர் சாலையோரம் தங்கினர். இதே போன்று, எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு வெளியூரில் இருந்து வந்திருந்த பயணிகள் அங்கேயே படுத்துறங்கினர். சென்னையின் முக்கிய வணிகப் பகுதியாக விளங்கும் பாண்டிபஜாரில் ஜவுளி கடைகள், உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள் போன்றவை இரவு 9 மணிக்குள் அடைக்கப்பட்டன. சென்னையின் பிற இடங்களிலும் இவற்றை காண முடிந்தது. இரவு நேர ஊரடங்கால் திருச்சியின் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், எந்நேரமும்...
தமிழகம்

தமிழகத்தில் இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது…!

கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரும்வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் அதிகரித்து வருகிற நிலையில், தற்போது தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் கொரோனா காரணமாக நேற்று முதல் பல கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுட்டுள்ளது. இதனால், இரவு நேரத்தில் பேருந்து இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையை தொடர்ந்து, ஆம்னி பேருந்துகளை பகலில் இயக்க முடியாது எனவும், கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரும்வரை ஆம்னி பேருந்துகள் இயங்காது என...
1 488 489 490 491 492
Page 490 of 492
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!