தமிழகம்

தமிழகம்

சிவகங்கை மாவட்டத்தில், வானவில் மன்றம் தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர், இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள “வானவில் மன்றம்” திட்டத்தினை, சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்திடும் பொருட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் “வானவில் மன்றம்” துவக்க நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர், இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள “வானவில் மன்றம்” திட்டத்தினை, சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்திடும் பொருட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் “வானவில் மன்றம்” துவக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர், தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளிக்கல்வித் துறையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, மாணாக்கர்களை பயன்பெறச் செய்து வருகிறார்கள். அதில், தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணாக்கர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும், அறிவியல் கண்ணோட்டத்துடன் பயில வேண்டும் என்பதற்காகவும், சிறந்த சிந்தனையாளர்களாக உருவாக்கிடும் பொருட்டும், “வானவில்...
தமிழகம்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியா ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகளை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி மூர்த்தி துவக்கி வைத்தார்.

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகளை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி மூர்த்தி துவக்கி வைத்தார்.  மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் உடன் பங்கெடுத்து பணிகளை துவக்கி வைத்தார்.  இப்பணிகளுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வெங்கடேசன், மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனிஸ்சேகர் இ.ஆ.ப, கூடுதல் ஆட்சியர் எஸ். சரவணன் இ.ஆ.ப, இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சூரியகலா கலாநிதி, மேற்கு ஒன்றிய சேர்மன் மணிமேகலை, யா. ஒத்தக்கடை ஊராட்சித் தலைவர் முருகேஸ்வரி சரவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநில...
தமிழகம்

பாலாறு, தேனாறு ஓடிய தமிழ்நாட்டில் டாஸ்மாக் பார்கள் ஓடும் அவல நிலை

கல்விச்சாலைகள் செய்வோம் என்று சொன்ன தமிழ் நாட்டிலே, இன்றைக்கு பார்சாலைகளாக மாறிவிட்டன.  அம்மா காலத்திலும் 500டாஸ்மார்க் கடைகள், எடப்பாடியார் காலத்தில் 500 டாஸ்மார்க் கடைகள் மூடப்பட்டன.  இளைய சமுதாயத்தை காப்பதற்கு நீதியரசர்கள் முன் வைத்திருக்கிற கேள்விகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அரசு முன்வருமா?  சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி. போதைப் பொருள்கள் பெரும் அச்சத்தை ஏற்பட்டு கேள்விக்குறியாக்குகிற இந்த அபாயகரமான சூழ்நிலையை, அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் தொடர்ந்து இந்த அரசை வலியுறுத்தி வருகிறார்கள். ஆளுநரிடம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் போதை பொருள் குறித்து, இந்த அரசு நடவடிக்கை எடுக்க தவறியதை சுட்டிக்காட்டி உள்ளார். தமிழ்நாட்டிலே சட்ட விரோதமாக போதை பொருள் தடுப்பு நடவடிக்கை என்பது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிற சூழ்நிலையிலே, அதைவிட இன்றைக்கு அதிகாரப்பூர்வமாக டாஸ்மாக் கடைகள் 24...
தமிழகம்

கிராமத்தில் நாட்டு நலபணித்திட்ட சிறப்பு முகாம் ஒருவாரம் நடைபெற்றது

மதுரை கூடல்நகர் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் மேற்கு ஊராட்சி கோவில் பாப்பாகுடி கிராமத்தில் நாட்டு நலபணித்திட்ட சிறப்பு முகாம் ஒருவாரம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அந்த பள்ளி மாணவிகள் பல்வேறு வகையில் கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். முகாமின் இறுதி நாளான இன்று கோவில் பாப்பாகுடி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் நடனம், நாடகம், பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை அருட்சகோதரி ஜோஸ்பின் அவர்கள், ஆசிரியை அருட் சகோதரி கேத்ரின் , ஒளிரும் மதுரை ஒருங்கிணைப்பாளர் துரை விஜயபாண்டியன், மற்றும் கோவில் பாப்பாகுடி ஊராட்சி வார்டு உறுப்பினர் சௌமியா , ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெகன் சிறிய புஷ்ப மல்லிகா மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.நாட்டு நலப்...
தமிழகம்

மதுரையில் கழிவு நீர் வாய்க்காலில் விழுந்து சிக்கிய பசுமாட்டை லாவமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு குவியும் பாராட்டுக்கள்

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் பசு மாடு ஒன்று தவறுதலாக விழுந்து மாற்றிக் கொண்டு சத்தமிட்ட வார இருந்ததை அடுத்து அக்கம்பக்கத்தினர் மதுரை டவுன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில், நிலைய அலுவலர் சேகர் தலைமையிலானக் குழு சம்பவ இடத்திற்கு வந்து பசு மாட்டை நீண்ட நேரம் போராடி பத்திரமாக மீட்டனர். மேலும் சாலைகளில் கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் பொறுப்பற்ற முறையில் கட்டவிழ்த்து விடுவதால் இது போன்ற அசம்பாவிதங்கள் அடிக்கடி நிகழ்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

மதுரை விமான நிலையம் நுழைவாயிலில் விரைவில் திறக்கப்பட இருக்கும் அம்பேத்கர் சிலையினை அமைச்சர் மூர்த்தி மற்றும் விசிக கட்சி திருமாவளவன் ஆய்வு

மதுரை விமான நிலையம் செல்லும் சாலை நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் Dr.அம்பேத்கரின் வெண்கல சிலையினை அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி முதலமைச்சரின் மு க ஸ்டாலின் காணொளி அல்லது நேரடியாக வந்து திறந்து வைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சிலை அமைந்துள்ள இடத்தினை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு கொண்டனர். தொடர்ந்து முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிலை வரும் பட்சத்தில் பாதுகாப்பு, மேடை அமைப்பது போக்குவரத்து மாற்றம் குறித்தும் தென் மண்டல துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டு விட்டு சென்றானர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

இராஜபாளையத்தில் பின்னோக்கி நடந்தவாறு பாக்சிங் செய்து நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை செய்த 8 வயது சிறுவன்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பிரபல தனியார் பஸ் கம்பெனி உரிமையாளர் முத்துராம்குமார்ராஜா ஜெய் ஹரிணி தம்பதியின் 8 வயது மகன் ரத்தினஜெய் ராஜா நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற பயிற்சியாளர் ஐயப்பன் உதவியுடன் தீவிர முயற்சி செய்து கடந்த சில மாதங்கலாக பயிற்சியில் ஈடுபட்டு வந்த சிறுவன் இன்று சாதனையில் ஈடுபட்டார். இராஜபாளையம் சின்மயா வித்தியாலயா பள்ளி சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி நடந்தவாறே பாக்ஸிங் செய்தவாறு சாதனையை மதுரை மாவட்ட காவல் துறை காண்காணிப்பாளர சிவபிரசாந்த சிறுவன் ரத்தினஜெய் ராஜா வாழ்த்தி கொடியசைத்து துவங்கி வைத்தார். இதையடுத்து சிறுவன் 5 கிலோமிட்டர் பின்னோக்கி நடத்தவாறு பாக்ஸ்சிங் செய்து சாதனை படைத்தார் .சிறுவனின் சாதனையை நோபல் உலக சாதனை அசிய (நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் ) புத்தகத்தில் பதிவு செய்ய நடுவர்கள்...
தமிழகம்

தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவு

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், இராஜபாளையம் சிவகாசி,அருப்புக்கோட்டை,ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வந்தது. இந்நிலையில் கனமழையினால் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் பாதுகாப்பு கருதி மாவட்டம் முழுவதுமுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டார். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

தாயை இரு சக்கர வாகனத்தின் மூலம் ஆன்மீக யாத்திரை அழைத்து சென்று கொண்டிருக்கும் கர்நாடகாவை சேர்ந்த கிருஷ்ணகுமார் சோமவார வழிபாட்டை ஒட்டி ராஜபாளையத்தில் உள்ள சொக்கர் கோயிலில் நடந்த சங்காபிஷேகத்தில் தாயுடன் வழிபாடு நடத்தினார்.

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள போகாதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். 45 வயதான இவரின் தந்தை காலமானார். இதனை அடுத்து இவரது தாய் ரத்னம்மாள் மிகவும் மனமுடைந்தார். தன்னுடைய வெறுமை குறித்து மகன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கிருஷ்ணகுமாரிடம் தெரிவித்தார். திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த கிருஷ்ணகுமார், தாயின் மனக் கஷ்டத்தை போக்குவதற்காக, கடந்த 2018ம் ஆண்டு முதல் ரத்னம்மாளை இரு சக்கர வாகனத்தின் மூலம் ஆன்மீக யாத்திரை அழைத்து சென்று கொண்டிருக்கிறார். தற்போது வரை நாடு முழுவதும் சுமார் 56 ஆயிரம் கிமீ வரை பயணம் செய்து, திருப்பதி, காளஹஸ்தி, ஶ்ரீரங்கம், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களில் தாயும் மகனும் தரிசனம் செய்துள்ளனர். அதன்படி ராஜபாளையம் வந்த இருவரும், தென்காசி சாலையில் உள்ள சொக்கர்...
தமிழகம்

திருப்பரங்குன்றம் விளாச்சேரி பகுதியில் தயாராகும் கார்த்திகை விளக்குகள். 5 ருபாய் முதல் 1500 ரூபாய் வரை விளக்குகள் விற்பனைக்கு தயார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா விளாச்சேரி பகுதியில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 6ம் தேதி நடைபெறுவதையொட்டி கார்த்திகை தீபம் தயாரிக்கும் வகையில் ஈடுபட்டு வருகின்றனர். விளாச்சேரி பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டு வருவதால் தமிழகம் மட்டுமல்ல அண்டை மாநிலங்களுக்கும் விளக்குகள் அலங்கார விளக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அகல்விளக்குகள் 5 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. அகல் விளக்கு, கணபதி விளக்கு' லட்சுமி விளக்கு' மகாலட்சுமி விளக்கு. ஐந்து விளக்கு' சுழல் விளக்கு மற்றும் கோவில்களில் ஏற்றப்படும் மிகப்பெரிய விளக்குகள் தயார் செய்யப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளுக்கு மலைகளில் ஏற்றப்படும் 100 லிட்டர் நெய் கொள்ளளவு கொண்ட விளக்குகள் தயார் செய்து ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது, கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்புகளால் விற்பனையாகமல்...
1 402 403 404 405 406 545
Page 404 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!