பொது மக்கள் எதிர்ப்பை தாண்டி பெரியகுளத்தில் மதுபான கடை திறப்பை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத்,முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ, மஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் போராட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகில் பொது மக்களுக்கு இடையூறாக மது பான கடை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்றது, கடையை திறக்க அனுமதி கொடுக்க கூடாது என இதனை கண்டித்து பல்வேறு அமைப்புகள் கடந்த 22 ம்தேதி காவல்துறை DSP அவர்கள் இடத்தில் மனு அளித்தார்கள். கடையை திறக்க மாட்டோம் என உறுதி அளிக்க பட்ட நிலையில் இன்று மதுபான கடை திடிரென திறக்க பட்டது இதனால் அந்த பகுதியில் பொது மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தார்கள். உடனே சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது, மாவட்ட செயலாளர் முபாரக் அலி, மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் அஜ்மீர் காஜா, எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் ஜாவித் மற்றும் நிர்வாகிகள் மஜக நிர்வாகிகள் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள்...
