தமிழகம்

தமிழகம்

பெரியகுளம் உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளருக்கு புத்தாண்டு வாழ்த்து

இன்று (26.12.2022) தேனி மாவட்டம் பெரியகுளம் மதுரை சாலையில் அமைந்துள்ள செயின்ட் ஆன்ஸ் ஜெ.ஸி. மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் முதல்வர் சிஸ்டர்ஜெயாமேரி, சிஸ்டர்அபிதா, ஹம்சத், ஜெயந்தி பஷீர் ஆகியோர் பெரியகுளம் உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கீதாவிற்கு கிறிஸ்மஸ் மற்றும்புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி கேக் வழங்கினர். செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

இந்தியகம்யூனிஸ்ட் கட்சி 98வது அமைப்பு தினம் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் நல்லகண்ணு பிறந்தநாள்

இன்று (26.12.2022) தேனி மாவட்டபெரியகுளத்தில்பழையபேருந்து நிலையம்அண்ணா சிலைஅருகில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சி 98வது அமைப்பு தினம் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் நல்லகண்ணு பிறந்தநாள் பொதுமக்களுக்குஇனிப்பு வழங்கிகொண்டாடபட்டது. இதில் பெரியகுளம் ரமேஷ் தலைமையில் அனைவரும் கலந்து கொண்டனர். செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

தேனி மாவட்டஆட்சியர் தலைமையில் நடைபெற்ற குறை தீர்க்கும் முகாமில் கோரிக்கை மனு

இன்று ( 26.12.20.22 ) தேனி மாவட்டஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்ற குறை தீர்க்கும் முகாமில்  தென்கரை பேரூராட்சிக்குட்பட்ட 2வது வார்டுகவுன்சிலர் மு.தேவராஜ்.தலைமையில் நவ்ஷாத், பால முருகன்,அரவிந்த்.முருகவேல் ஆகியோர் தேனி மாவட்டஆட்சியரிடம் நேரடியாக மனு வழங்கினர்.   குடிநீர்வசதி ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், பொதுமக்களின்தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

108 மருத்துவ பணியாளரை ஓடும் ஆம்புலன்சில் கத்திரிக்கோலால் குத்திய நபரால் மேலூரில் பரபரப்பு

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த பதினெட்டாங்குடி பகுதியில் விபத்தில் சிக்கி காயம் அடைந்த இருவரை , மேலூர் 108 ஆம்புலன்ஸ் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு ஏற்றி வந்த போது , கருத்தபுளியம்பட்டி பேருந்து நிலையம் அருகே ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்த போது விபத்தில் காயம் அடைந்தவருக்கு சிகிச்சை அளிக்க 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளர் விமல் என்பவரை மது போதையில் இருந்த நபர் கத்திரிக்கோலால் உடலில் 5 க்கு மேற்பட்ட இடங்களில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த 108 ஊழியரை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனைத்து செல்லப்பட்டுள்ளார். தகவல் அறிந்த மேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 108 மருத்துவ ஊழியரை கத்திரிக்கோலால் குத்திய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செய்தியாளர்...
தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் அதிவேகமாகச் சென்ற விலை உயர்ந்த இரண்டு சக்கர வாகனம் சாலையோர கடைக்குள் புகுந்ததால் சூடான எண்ணெய் தெரித்ததில் வடை கடை உரிமையாளர் சாலையில் நடந்து சென்ற காவலாளி மற்றும் வாகன ஓட்டி படுகாயம் காயம்

மதுரை திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் அழகப்பன் நகர் அருகே சரவணா ஸ்டோர் என்னும் மிகப்பெரிய அங்காடி செயல்பட்டு வருகிறது இந்த பகுதியில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் என்பது இருந்து வருகிறது இதனால் தடுப்புச் சுவர்களும் அமைக்கப்பட்டிருக்கிறது.   இருப்பினும் கூட பைக்கின் மீது தீராத காதல் கொண்ட இளைஞர்கள் அதிவேகமாக மதுரை மாநகரை சுற்றி வலம் வந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வண்ணமாக வாகனத்தை இயக்குகிறார்கள். இந்த நிலையில் இன்று இரவு மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து அழகப்பன் நோக்கி வந்த விலை உயர்ந்த இரண்டு சக்கர வாகனம் கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து வாகனங்களில் மோதி சாலை ஓரமாக நடைபெற்று வரும் வடை கடைக்குள் புகுந்து விட்டது.  வடை கடையில் எண்ணெய் சூடாக இருந்ததால் எண்ணெய் தெரித்ததில் வடைகடையின் உரிமையாளர் சாலையில் சென்று கொண்டிருந்த காவலாளி மற்றும் இரண்டு...
தமிழகம்

உசிலம்பட்டியில் 96 திரைப்படப் பாணியில், 96ஆம் ஆண்டு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் 1996ஆம் ஆண்டு வணிகவியல் பாடப்பிரிவில் பயின்ற 80க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவிகள் இன்று 26 ஆண்டுகளுக்கு பின்பு அதே பள்ளியில் ஒன்றிணைந்து சந்தித்து கொண்டனர்., 96 திரைப்பட பாணியில் வாட்ஸ் ஆப் குழு மூலம் 96 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவ மாணவிகளை ஒருங்கிணைந்த அவர்களுடன் பயின்ற நண்பர்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்வை ஏற்படுத்தினர்., 26 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்துக் கொண்ட மாணவ மாணவிகள் பழைய நினைவுகள் பகிர்ந்து கொண்டனர்., தொடர்ந்து தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரிய ஆசிரியைகளை அழைத்து வந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்து காலில் விழுந்து ஆசி பெற்றனர். மேலும் பள்ளியின் வளர்ச்சிக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என உறுதி ஏற்றுக் கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர். செய்தியாளர் : உசிலை...
தமிழகம்

அருப்புக்கோட்டை அருகே, ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 22 கிலோ கஞ்சா பிடிபட்டது. 4 பேர் கைது

விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவின் பேரில், கஞ்சா தடுப்பு நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆபரேசன் 3.0 கஞ்சா தடுப்பு தனிப்பிரிவு போலீசாருக்கு, ஆந்திரா மாநிலத்தில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அருப்புக்கோட்டை அருகேயுள்ள தொட்டியங்குளம் ரயில்வே பாலம் சந்திப்பு பகுதியில், ஏ.எஸ்.பி. கருண்கரட் தலைமையிலான போலீசார், நேற்று நள்ளிரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பகுதியில் வேகமாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அந்த காரில் 22 கிலோ கஞ்சா கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ளது என்று தெரிய வந்தது. காரில் கஞ்சா கடத்தி வந்த பாலையம்பட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (30) திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த...
தமிழகம்

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு,வெல்லம் கொடுக்க கோரி பாஜக விவசாய அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.  2022ம் ஆண்டு சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து நியாயவிலைக் கடைகளின் வாயிலாக, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயல்படுத்தியது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருட்களோடு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனையடுத்து, ஆட்சி மாற்றம் நிகழ்ந்த நிலையில், ரொக்கப் பணத்திற்கு பதிலாக அரிசி, நெய், ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பொருட்களோடு மிளகாய் பொடி, கடுகு உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மளிகைப் பொருட்களும் வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் ,இந்த வருடம் பல்வேறு விமர்சனங்களின் எதிரொலியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு...
தமிழகம்

மதுரையில் இரு வேறு விபத்துகளில் பைக்கில் சென்ற இளைஞர் மீது லாரி மோதியதில் இளைஞர் தலை நசுங்கி பலி மற்றொரு விபத்தில் முதியவர் மீது அரசு பேருந்து மோதியதில் தலை நசுங்கி பலி

மதுரை மாநகர் கரிசல்குளம் ராம் முனி நகர் பகுதியை சேர்ந்த நாகராஜ் (எ) ராஜன்(35) தனது மனைவி ரேணுகாதேவியுடன் வாடகை வீட்டில் வசித்துவருகிறார். இவர் காளவாசல் பகுதியில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் லோன் முகவராக பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில் இன்று காலை காளவாசல் அலுவலகத்திற்கு பைக்கில் சென்றுகொண்டிருந்துள்ளார். கூடல்நகர் மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது முன்னால் சென்ற நுகர்பொருள் வாணிபகழகத்திற்கு சொந்தமான ஒப்பந்த லாரி ரேசன் பொருட்களை ஏற்றிவந்தபோது திடிரென பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி லாரியின் சக்கரத்திற்குள் விழுந்த நிலையில் தலை நசுங்கி சம்பவ இடத்திலயே ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். ராஜன் தலைக்கவசம் அணிந்திருந்த்நிலையிலும் தலைநசுங்கிய நிலையில் உயிரழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து...
தமிழகம்

எழுமலைப் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பெண்கள் கைது.22 கிலோ கஞ்சா பறிமுதல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எலுமலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுரை தனிப்படை பிரிவு போலிசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்ததின் அடிப்படையில் போலிசார் சோதனையில் ஈடுபட்ட போது எழுமலை அருகே மானூத்து முனியாண்டி கோவில் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த பெண்களைப் பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக எழுமலை அருகே மானுத்தை சேர்ந்த பாண்டியின் மனைவி பவுன்தாய்(50) ,வீரா மனைவி பேச்சியம்மாள்(55), பாஸ்கர் மனைவி பேச்சியம்மாள்(45). ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த மூன்று பெண்களையும் கைது செய்து அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து எழுமலை போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர் : உசிலை சிந்தனியா...
1 344 345 346 347 348 546
Page 346 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!