தமிழகம்

தமிழகம்

காங்கேயநல்லூர் வரதராஜபெருமாள் கோயிலிலில் விசேஷ பூஜை

வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநல்லூர் வரதராஜபெருமாள் கோயிலில் நடந்த விசேஷ பூஜையில் வேலூர் மாவட்டமைய கூட்டுறவு வங்கி தலைவரும் முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர் வி.ராமு மற்று மற்றும் அதிமுக. மாநகராட்சி கவுன்சிலர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

பொங்களுக்கு 5000 வழங்க வேண்டும் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்,  வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகளுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு கட்சியினருக்கு திருமண அழைப்பிதழ் வழங்கி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது: அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பூத் கமிட்டியில் தகுந்த நபர்களை நியமிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் வீயூகம் குறித்து பேசினார். நம்மை விட்டு பிரிந்தவர்கள் நம்மை விமர்சனம் செய்வதையே வேலையாக வைத்துள்ளார்கள். திராவிட முன்னேற்றக் கழக அரசின் மீது மிகப்பெரிய அதிருப்தி மக்களுக்கு உள்ளது.  தமிழர் என்று சொல்லி பொங்கலுக்கு கரும்புதர மறுக்கிறார்கள். கரும்பு விவசாயிகள் வேதனையோடு உள்ளனர். பொங்கலுக்கு ரூபாய் ஐயாயிரம் தர வேண்டும். சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, மின் கட்டண...
தமிழகம்

மதுரை டிபிகே சாலையில் அரசு பஸ் மோதி முதியவர் பலி : சிசிடிவி காட்சிகள் வெளியீடு – பரபரப்பு

மதுரையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பரப்பரப்பான சாலைகளில டி.பி.கே சாலை ஒன்றாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதும், வருவதுமாக இருக்கும் இருக்கும் நிலையில் நேற்று மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து மாடக்குளம் செல்லும் பேருந்து எண் (TN-58/N-0932) இந்த சாலையில் சென்று கொண்டிருந்தது. மேயர் முத்து பாலம் அருகே சென்ற போது மதுரை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த கனகசுந்தரம் மகன் ராமர் என்ற 60 வயது முதியவர் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது பின்னால் வந்த இந்த அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே தூக்கி விடப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த விபத்து பதிவான காட்சிகள்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே உள்ள சிந்து பட்டியில் நூற்றாண்டு கடந்த சார் பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சிந்து பட்டி கிராமத்தில் 1914 ஆம் ஆண்டு முதல் சார்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இதனால் அருகில் உள்ள கிராமங்களான தும்மக்குண்டு, காங்கேயநத்தம், நக்கலகோட்டை, பன்னீர்குண்டு, காளப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழக அரசு பத்திரப்பதிவு அலுவலகங்களை தாலுகா வாரியாக பிரிக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தாலுகா வாரியாக பத்திர பதிவு அலுவலகம் பிரிக்கப்படும் முடிவால் சிந்து பட்டியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் செல்லம்பட்டிக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிந்துபட்டி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செல்லம்பட்டி பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம் தொடங்குவதற்கு தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதால் அதனை கண்டிக்கும் விதமாக சிந்துபட்டி காங்கேயநத்தம் வெங்கடாச்சேரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச்...
தமிழகம்

மேலூர் நான்கு வழிச்சாலையில் நெற்கதிர் அறுவடை செய்யும் இயந்திர வண்டி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து

மதுரை மேலூர் அருகே மலம்பட்டி நான்கு வழிச்சாலையில் நெற்கதிர் அறுவடை செய்யும் இயந்திர வண்டியின் மீது, சென்னையிலிருந்து நாகர்கோயில் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்தானது. மேலூர் நான்கு வழிச்சாலையில் இயந்திர வண்டி ( யூ டர்ன்) திரும்பும் போது ஆம்னி பேருந்து மோதி விபத்தானது. ஒருவர் மட்டும் படுகாயடைந்தார். அதிர்ஷ்டவசமாக சுமார் 30க்கும் மேற்பட்டோர் காயமின்றி தப்பினர். விபத்து குறித்து மேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் – மத்திய அமைச்சர் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஜெனரல் டாக்டர்.விஜயகுமார் சிங்

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஜெனரல் டாக்டர்.விஜயகுமார் சிங் ஒன்றிய மற்றும் மாநில அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஜெனரல் டாக்டர்.விஜயகுமார் சிங் , ஒன்றிய மற்றும் மாநில அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டு தெரிவிக்கையில், பாரத பிரதமர், இந்தியாவில் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி, இந்தியாவினை வளாச்சிப்பாதையில் வழிநடத்தி வருகிறார்கள். அதன்மூலம் தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்கும் நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும்...
தமிழகம்

ஆஸ்ட்ரோசைட்டோபதி என்ற அரிதான ஆட்டோ இம்மியூன் (Auto Immune) நோய்க்கு இந்தியாவில் சிகிச்சையளிக்கும் முதல் மருத்துவமனை என்ற பெருமையை பெறும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை

2016-ம் ஆண்டில் முதலில் வரையறை செய்யப்பட்ட GFAP ஆஸ்ட்ரோசைட்டோபதி என்ற Auto Immune நோய், உடல் மற்றும் மற்றும் மன ஆரோக்கியத்தில் அதிவிரைவான மாற்றங்களை விளைவிக்கக்கூடும் மூளை மற்றும் முதுகுத்தண்டில் பல்வேறு தொற்று / அழற்சி நிலைகளைப் போலவே இந்நோயின் அறிகுறிகளும் தோன்றக்கூடும் என்பதால் இதை சரியாக அடையாளம் கண்டு உறுதி செய்வது சவாலாகும். தென்தமிழ்நாட்டின் முன்னணி பன்முக சிறப்பு மருத்துவமனை என புகழ் பெற்றிருக்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மூளை மற்றும் முதுகுத்தண்டின் இயக்கங்களை பாதிக்கின்ற அரிதான மற்றும் சமீபத்தில் வரையறை செய்யப்பட்டிருக்கும் ஒரு Auto Immune நோயான ஆட்டோ இம்யூன் GFAP ஆஸ்ட்ரோசைட்டோபதி கண்டறியப்பட்ட 31 வயதான ஒரு பெண்மணிக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்திருக்கிறது. இந்தியாவில் இந்நோய்க்கு சிகிச்சை வழங்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். இன்டராவீனஸ் ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் சீராய்டு மருந்துகளை கொண்டு...
தமிழகம்

தீண்டாமை கொடுமைக்கு முடிவு கட்டிய இரு பெண் ஆளுமைகள்; விசிக தென்காசி நாடாளுமன்ற செயலாளர் வர்க்கீஸ் வாழ்த்து

தீண்டாமை கொடுமைக்கு முடிவு கட்டிய இரு பெண் ஆளுமைகள் புதுகோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு IAS மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே IPS ஆகியோருக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் தென்காசி நாடாளுமன்ற செயலாளர் மை.வர்க்கீஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புதுக்கோட்டை மாவட்டம், அன்னவயல் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமுகத்தினர் குடியிருப்பில், கடந்த ஒரு வாரம் முழுவதும் குழந்தைகளுக்கு வாந்தி, பேதி, மயக்கம் போன்ற பாதிப்புகளால் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக குழந்தைகள் அதே ஊரில் பாதிக்கப்பட்டதால் மருத்துவர்கள் அந்த ஊரில் உள்ள குடிநீரில் பிரச்சினை இருப்பதாக கூறியிருக்கிறார்கள், அதனை தொடர்ந்து அங்குள்ள இளைஞர்கள் குடிநீர் தொட்டியில் ஏறி பார்க்கும் போது, அந்த குடிநீரில் மனித மலம் கலந்திருப்பதை,...
தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில், கல்வி கடன் முகாமில் 255 மாணவர்கள் விண்ணப்பம் – ஆட்சியர் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் வட்டார அளவில், கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கடன் சிறப்பு முகாம் நடைபெற்றது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் முன்னோடி வங்கிகள் கலந்து கொண்டன. முகாமில் மொத்தம் 255 மாணவ, மாணவிகள் 9 கோடியே, 66 லட்சம் ரூபாய் கல்வி கடன் கேட்டு விண்ணப்பங்கள் வழங்கியுள்ளனர். உடனடி கல்வி கடனாக 1 கோடியே, 74 லட்சம் ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. மீதி விண்ணப்பங்களும் விரைவாக பரீசிலனை செய்து மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தகவல் வெளியிட்டுள்ளார். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

சாத்தூரில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (25). கூலி வேலை பார்த்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி, தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். வழக்குபதிவு செய்த போலீசார், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கார்த்தியை, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
1 341 342 343 344 345 546
Page 343 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!