தமிழகம்

தமிழகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பாக அவலம்

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் ஆலய மேல சித்திரவிதியில், கோயில் முன்பாக பல நாட்களாக கழிவுநீர் பெருக்கெடுத்து சாலையில் குளம் போல தேங்கியுள்ளன. இத்திருக்கோவிலுக்கு, தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் .  இப்படி புகழ்பெற்ற ஆலயத்தின் வாசலில் கழிவு நேரானது சாலைகளை பெருக்கெடுத்து ஓடுகிறது. இது குறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் மதுரை மாநகராட்சி சுகாதாரப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தும், கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வில்லையாம் . மேலும், இந்து சமய அறநிலைய  ஆட்சித் துறையானது, இது குறித்து மாநகராட்சி அதிகாரி கவனத்திற்கு கொண்டு சென்று, கோவில் வாசலில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரை தடுத்து நிறுத்த ஒரே நடவடிக்கை எடுக்க பக்தர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

மதுரையில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றது; 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு கலைத்திருவிழா நடைபெறுகிறது. முதலில் மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கான போட்டிகள் மாநில அளவில் மதுரை, கோயம்புத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிரிவு வாரியாக மூன்று நாட்கள் நடைபெறுகிறது. அதில் மதுரை மாவட்டத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கான 50 போட்டிகள், 6 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 38 மாவட்டத்தைச் சேர்ந்த 4400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு பேருந்து, தங்கும் வசதி, உணவு பட மூன்று நாட்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா நேரடி கண்காணிப்பில் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் ஏற்பாடுகள் செய்துள்ளனர்....
தமிழகம்

மாநகராட்சியில், மக்கள் குறைதீர்க்கும் நாள்

மதுரை மாநகராட்சி  பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் நடைபெற்றது.  மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.  மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்துவரி, பெயர் மாற்றம் வேண்டி 8 மனுக்களும், புதிய வரி விதிப்பு வேண்டி 2 மனுக்களும், புதிய குடிநீர் குழாய் இணைப்பு வேண்டி 3 மனுக்களும், காலிமனை வரி விதிப்பு வேண்டி 3 மனுக்களும், இதர கோரிக்கைகள் வேண்டி 32 மனுக்களும் என மொத்தம் 48 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால், நேரடியாக பெறப்பட்டது. இம்முகாமில், துணை மேயர் தி.நாகராஜன், துணை ஆணையாளர் முஜிபூர் ரகுமான், மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, உதவி ஆணையாளர் வரலெட்சுமி, மக்கள்...
தமிழகம்

மதுரை விமானநிலையத்தில் CISF வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து மதுரை விமான நிலையம் உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் ட்விட்டரில் பதிவு

மதுரை விமான நிலையத்தில் நேற்று பகல் திரைப்பட நடிகர் சித்தார்த் அவர்களின் தாய் தந்தையர் வருகை தந்த போது மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் இந்தியில் பேசி காக்க வைத்ததாக நடிகர் சித்தார்த் பதிவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன இந்நிலையில் நடிகர் சித்தர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்துக்கு ஆதரவாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் இது குறித்து விமான நிலைய மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்களிடம் விசாரணை செய்ய வேண்டும் என கோரிக்கை ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

தல்லாகுளம் பகுதியில் தொடர் வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது

மதுரை மாநகர் கோ புதூர் பகுதியைச் சேர்ந்த பீலிக்ஸ் ராஜன் இவர் தன்னுடைய வீட்டிலிருந்து போது கழுத்தில் அணிந்து இருந்த ஏழு சவரன் தங்க நகையை நேற்று மர்ம நபர்கள் பிரட்டி சென்ற நிலையில் சிசிடிவி கேமரா கட்சிகள் அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் மதன் ஆகிய இருவரையும் கைது செய்து அவரிடம் இருந்து செல்போன் மற்றும் தங்க நகையை பறிமுதல் செய்து தல்லாகுளம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

மதுரையில் 21 வயது இளைஞரை வீடுபுகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல்; போலீசார் விசாரணை

மதுரை விளாங்குடி அடுத்துள்ள கரிசல்குளம் மந்தை திடல் அருகே கட்டட வேலை செய்து வரும் பூமிநாதன் எனும் 21 வயது மதிக்கதக்க இளைஞரை இன்று மாலை வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தவரை வீடு புகுந்து நான்கு பேர் கொண்ட கும்பல் தலை கைகளில் சுமார் 20 முறை வெட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மதுரை கூடல் புதூர் காவல்நிலையத்திற்க்கு அளித்த தகவலின் படி பூமிநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

ஒத்தக்கடை பகுதியில் அடுத்தடுத்து தொடரும் சைக்கிள் திருட்டு

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடை பகுதியில் அடுத்தடுத்து சைக்கிள்கள் திருடப்பட்டு வந்துள்ளனர் இந்த நிலையில் நேற்று காலை பாரதி நகரில் வசித்து வரும் பாபு ஹசன் என்பவருக்கு சொந்தமான சைக்கிளை தனது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்துவிட்டு சென்றுள்ளார் மாலை வீட்டில் வெளியே வந்து பார்த்தபோது நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிள் திருடப்பட்டது தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து ஆற்றல் அறக்கட்டளை மற்றும் பாபுஹாசன் இணைந்து சைக்கிளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பார்த்தபோது சக்கர வாகனத்தில் இருவர் இணைந்து சைக்கிளை எடுத்துச் செல்லும் காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

பட்டையை கிளப்பும் 14 வது வார்டு கவுன்சிலர் முகமது நசீர்

திண்டுக்கல் மாவட்டம் அம்மைய நாயக்கனூர் பேரூராட்சி 14 வது வார்டு கவுன்சிலராக திமுக வை சேர்ந்த முகமது நசீர் என்பவர் உள்ளார். இவர் தொடர்ந்து தமது பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி, தெருக்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வது,தெரு விளக்கு பிரச்சினைகள், சாக்கடை பிரச்சினைகள், போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி பணியாற்றி வருகிறார். இதன் ஒரு பகுதியாக அம்மைய நாயக்கனூர் சுடுகாடு நீண்ட காலமாக புதர்கள் மண்டியும் சரி வர பராமரிப்பு இன்றியும் கிடந்தது. இறந்தவர்களின் உடல்களை அங்கு கொண்டு சென்று எரிப்பதற்கோ புதைப்பதற்கோ மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதை அறிந்த முகமது நசீர் அந்த சுடுகாட்டை சுத்தம் செய்து அதற்கான பாதைகளை சரி செய்து தந்துள்ளார். பொது மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு வகையான பணிகளைச் செய்து வருவதால் மக்கள் மத்தியில் இவரது...
தமிழகம்

வத்திராயிருப்பு அருகே, சீன நாட்டிலிருந்து திரும்பிய தாய், மகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி… சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று காலை, சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த பயணிகள் விமானத்தில், பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்த பரிசோதனையில் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 6 வயது மகள் இருவருக்கும், கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் தாய், மகள் இருவரும் அவர்களது வீட்டிலேயே 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இவர்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்களுக்கு தொற்று பரிசோதனைகள் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இலந்தைகுளம் பகுதியில், சிவகாசி சுகாதார துணை இயக்குனர் கழுசிவலிங்கம்...
தமிழகம்

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் தினம்

இராமநாதபுரத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் நிறுவனர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் ஜியோ சென்டரில் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் வேளாண் அறிவியல் மையம் பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் இளஞ்செழியன் நெல் மற்றும் கடலை சாகுபாடியில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடுகள் குறித்து விவசாயிகளின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார். வேளாண் ஆலோசகர் திரு. ஸ்ரீதர் உர மேலாண்மை, பயிர் பாதுகாப்பு மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்தும், செல்வி.நூருல்கதிஜா சந்தைப்படுத்துதல் மற்றும் மத்திய மாநில அரசுகளின் தொழில் முனைவோருக்கான திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தனர். இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம், சிவங்கை மாவட்ட பண்ணைப் பள்ளி (Digital Farm School) விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர். ஏற்பாடுகளை மாவட்ட மேலாளர் ஸ்ரீகிருபா, களப்பணியாளர் இராமு, வீரபிரபாவதி, கார்த்திகா ஆகியோர் செய்திருந்தனர்....
1 340 341 342 343 344 546
Page 342 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!