தமிழகம்

தமிழகம்

வேலூருக்கு நாளை முதல்வர் வருகை’ கள ஆய்வில் முதலமைச்சர். என்ற திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்க நாளை 1-ம்தேதபுதன்கிழமை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காலை ரயில் மூலம் மதியம் 12.30 மணியளவில் காட்பாடி ரயில்நிலையம் வருகின்றார். அவருக்கு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. உயர் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.பின்பு காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கல்விசார்ந்த திட்டத்தை துவக்கி வைக்கிறார்.பின்பு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது..பின்பு தனியார் ஓட்டலில் தங்கிவிட்டு மாலை வேலூர் விஐடி சென்று கட்டிடம் ஒன்றை திறந்துவைக்கிறார். மறுநாள் 2-ம் தேதி வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியர்களுடன் அரசின் திட்டம் குறித்து ஆய்வு செய்கிறார், முதல்வர் வருகையொட்டி வேலூர் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 2 டிஐஜிக்கள், 6எஸ்பிக்கள் மற்றும் 3 ஆயிரம்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே செம்பட்டி பகுதியில் நெல் கொள்முதல் மையம் அமைக்க அரசு காலம் தாழ்த்தி வருவதால் களத்தில் வீணாகும் நெல்மணிகள்;.விவசாயிகள் வேதனை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செம்பட்டி கன்னியம்பட்டி , ராமநாதபுரம் , கட்டத்தேவன்பட்டி, கள்ளபட்டி,மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் சுமார் 1000க்கும் மேறப்பட்ட ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளனர்.இப்பகுதி மக்கள் நெல்களை சுமார் 10 கி.மீ தொலைவிலுள்ள செல்லம்பட்டியிலுள்ள அரசின் நெல் கொள்முதல் மையத்திற்கு சென்று விற்பனை செய்து வந்தனர்.தூரம் அதிகமாக இருப்பதால் தங்கள் பகுதியிலேயே அரசின் நெல் கொள்முதல் மையம் அமைக்க வேண்டுமென அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனையடுத்து அதிகாரிகள் தரப்பில் செம்பட்டியில் விரைவில் நெல் கொள்முதல் மையம் அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை நம்பிய கிராமக்களும் நெற்பயிர்களை அறுவடை செய்து விற்பனை செய்யாமல் கிராமத்திலுள்ள களத்தில் (பொது இடத்தில்) நெல்களை குவித்து வைத்துள்ளனர்.ஆனால் இதுவரை அரசு சார்பில் நெல் கொள்முதல் மையம் அமைக்க எந்த முயற்ச்சியும் மேற்க்கொள்ளப்படவில்லை.இதனால் விவசாயிகள் அறுவடை செய்து வைத்திருந்த நெல்...
தமிழகம்

சிவகாசியில் துணிகரம் – பட்டப்பகலில் ரேசன் கடையில் இருந்து அரிசி மூடைகளை கடத்திய, பெண் ஊழியர் உட்பட 2 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, பராசக்தி காலனி பகுதியில் உள்ள ரேசன் கடையில் முஸ்லீம் தெரு பகுதியைச் சேர்ந்த மும்தாஜ்பேகம் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இன்று காலை குறிப்பிட்ட இந்த ரேசன் கடையின் அருகில் மினி சரக்கு வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டு, ரேசன்கடையில் இருந்து ரேசன் அரிசி மூடைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனை கடை ஊழியர் மும்தாஜ்பேகம் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் ரேசன் கடையிலிருந்து மூடை, மூடையாக அரிசி கடத்தப்படுவதைப் பார்த்து கடையின் பெண் ஊழியர் மற்றும் வாகன ஓட்டுநரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சிலர், சிவகாசி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார், ரேசன் கடை ஊழியர் மும்தாஜ்பேகம், மினி வேன் ஓட்டுநர் கார்த்திக்...
தமிழகம்

சிவகாசி அருகே, இலவச எலும்பு நோய் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியில், விஸ்வநத்தம் ஊராட்சி மன்றம், சுருதி மருத்துவமனை, 02 பசுமை நண்பர்கள் அறக்கட்டளை, துளிர்கள் இணையம், ஹேண்ட் இன் ஹேண்ட் அமைப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் இணைந்து பொது மருத்துவம் மற்றும் எலும்பு நோய் மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தினர். விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமை, விஸ்வநத்தம் ஊராட்சி மன்றத்தலைவர் நாகராஜன் தலைமையில், 02 பசுமை நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் மாரியப்பன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாகேந்திரன், ஹேண்ட் இன் ஹேண்ட் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் ஈஸ்வரி, நுகர்வோர் பாதுகாப்புசேவை மைய மாநில தலைவர் சுப்பிரமணியம் துவக்கி வைத்தனர். சுருதி மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் மணிகண்டன் தலைமையிலான மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை முகாமில் கலந்து கொண்டனர். முகாமில் சுமார் 200க்கும்...
தமிழகம்

மதுரையில் குஜராத் கலவரம் குறித்த சர்ச்சைக்குறிய பிபிசி- யின் ஆவணப்படத்தை பொதுமக்கள் முன்னிலையில் திரையிட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 8 பேர் கைது

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தின் முதல்வராக இன்றைய பிரதமர் நரேந்திரமோடி இருந்த போது குஜராத்தில் மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டது. அந்த சம்பவம் தொடர்பாக பிபிசி ஊடகம், குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டது. இதில் சில சர்ச்சைக்குரிய கருத்துகள் உள்ளதாக பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து மத்திய அரசு, பிரதமர் மோடி தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை முடக்குமாறு யூடியூப், ட்விட்டர் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து பல்வேறு மாணவ அமைப்பினர் டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் திரையிடப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து மதுரையில் நேற்று ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக ஆவணபடம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த பகுதியில் சுமார் நூற்றுக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து உரிய அனுமதி பெற்று திரையிட போலீசார் அறிவுறுத்தியதை தொடர்ந்து...
தமிழகம்

தமுமுக அலுவலகத்திற்க்கு வருகை தந்த ஜமாத்தார்களை அன்புடன் வரவேற்ற தமுமுக நிர்வாகிகள்

மரியாதை நிமித்தமாக தமுமுக அலுவலகத்திற்க்கு வருகை தந்த ஜமாத்தார்களை தமுமுக நிர்வாகிகள் அன்புடன் வரவேற்றனர். ஓசூர் மாநகர மற்றும் சுற்றுவட்டார முஸ்லிம்களை பற்றி கவலையோடு கலந்தாலோசித்த ஜமாஅத் நிர்வாகிகள் சமுதாயத்திற்கு தேவையான கல்வி,சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய தொழில் மற்றும் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கான பணிகளில் இணைந்து செயல்படுவது என்று கலந்துரையாடப்பட்டது. இந்த கலந்துரையாடல் நிகழ்வில் ஓசூர் மாநகர ஜாமியா மஸ்ஜித் தலைவர் ஜனாப் ஏஹ்ஸான்உல்லா கான், ஜமாத்ஹே அஹ்லே ஹதீஸ் மஸ்ஜித் தலைவர் ஜனாப் சையத் ஷபியுல்லா, செயலாளர் ஜனாப் முகமது ஆதில், மதினா மஸ்ஜித் தலைவர் ஜனாப் ரியாஸ் மதினா மஸ்ஜித் நிர்வாகி ஜனாப் அப்துல் மாலிக் ஆகியோர்களுடன் தமுமுக மாநில செயலாளர் அல்தாப் அஹமத் மாவட்ட தலைவர் ஜாகிர் ஆலம், மமக மாவட்ட செயலாளர் ஜுபைர் அஹமத், தமுமுக மாவட்ட செயலாளர் ஏஜாஸ் கான், ஓசூர்...
தமிழகம்

சிவகாசியில் பணியிலிருந்த பெண் காவலரை தாக்கிய, வழக்கறிஞர் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜம்மாள். இவர் நேற்று இரவு சிவகாசி முருகன் கோவில் பகுதியில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிவகாசி - திருத்தங்கல் சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக சிலர் தகராறு செய்து கொண்டிருப்பதாக காவலர் ராஜம்மாளுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த இடத்திற்கு ராஜம்மாள் விரைந்து சென்றார். அங்கு சாலையில் தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து விலக்க முயன்றார். அப்போது தகராறில் ஈடுபட்டிருந்த வாலிபர் ஒருவர், பெண் காவலர் ராஜம்மாளை பலமாக தாக்கினார். இது குறித்து தகவலறிந்த சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவலர் ராஜம்மாளை தாக்கிய வாலிபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீசார் விசாரணையில், பெண் காவலரை தாக்கிய வாலிபர் பெயர் முத்துமணிகண்டன் என்றும், அவர் வழக்கறிஞர்...
தமிழகம்

மதுரையில் தேமுதிக மாநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முத்துப்பட்டி பா. மணிகண்டன் தலைமையில் ஈரோடு மாவட்டம் இடைத்தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கழக பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் ஆணைக்கிணங்க கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனைப்படி மாநகர் தெற்கு மாவட்டம் சார்பாக முத்துப்பட்டி பா.மணிகண்டன் தலைமையில் ஈரோடு மாவட்டம் கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் மாநகர் தேமுதிக தலைமை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் கழக நிர்வாகிகள் ஏரளமானோர் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட கழக செயலாளர் முத்துப்பட்டி மணிகண்டன் ஆலோசனை கூறியதாவது ஈரோடு மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பாக ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் ரமேஷ் வேட்பாளராக கேப்டன் அவர்கள் அறிவித்திருக்கிறார் அவரை வெற்றி பெற செய்வதற்கு தலைமைக் கழகம் நம்முடைய மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பூத்துகளில் தீவிரமாக கட்சிப் பணியாற்ற வேண்டும் தேர்தல் முடியும் வரை ஈரோடு மாவட்டத்தில் மதுரை மாநகர்...
தமிழகம்

மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு நாளை முன்னிட்டு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள்

நாடு முழுவதிலும் மகாத்மா காந்தியின் 75 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் அமைந்துள்ள காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் முழு திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காந்தி நினைவு நிதியின் கீழ் இயங்குகின்ற காந்திய சிந்தனை கல்லூரி முதல்வர் முத்துலட்சுமி, அருங்காட்சியக செயலாளர் நந்தா ராவ், பாரதி யுவகேந்திரா அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு மற்றும் இத்தாலி நாட்டில் இருந்து வந்த மாசிலோனா குடும்பத்தினர் மற்றும் லோரா உள்ளிட்ட சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதேபோல, ஜப்பான் நாட்டு புத்த பிட்சு மஸ்தாவோ இஸ்தானி காந்தி சிலையின் காலில் விழுந்து கும்பிட்டு மரியாதை செய்தார். தொடர்ந்து ஜப்பான் மொழியில் காந்தியை போற்றும் விதமாக இசைக்கருவி இசைத்தவாறு பாடல் பாடினார். தொடர்ந்து காந்தியின் நினைவு...
தமிழகம்

மதுரை புறநகர் பகுதிகளில் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோருடன் இனைத்து.முக அழகிரி பிறந்தநாள் போஸ்டரால் பரபரப்பு. கலக்கத்தில். திமுக நிர்வாகிகள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி மற்றும் விக்கிரமங்கலம் பகுதிகளில் மீண்டும் அழகிரியின் பிறந்தநாள் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் திமுக நிர்வாகிகள் மத்தியில் கிலியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி பிறந்த நாளை ஒட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி விக்கிரமங்கலம் பகுதிகளில் அவரின் ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் சமீப காலமாக முக அழகிரி பிறந்த நாளை கொண்டாடுவதில் அவரது ஆதரவாளர்கள் இடையே சுணக்கம் ஏற்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மகனான உதயநிதி மதுரை வந்தபோது முன்னாள் மத்திய அமைச்சரும் தனது பெரியப்பாவுமான முக அழகிரியை அவரதுஇல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் அப்போது தனது தம்பி மகன்...
1 309 310 311 312 313 563
Page 311 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!