உலக சாதனை : துபாயில் திருக்குறள் திருவிழா
துபாய் ஜெபல் அலி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று சனிக்கிழமை 28/01/2023 துபாய் யாழ் கல்வியகம் மற்றும் அமெரிக்க சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா நடைபெற்றது. இதில் சுமார் 250 மாணவர்கள் கலந்து கொண்டு 3500 திருக்குறளை ஒப்புவித்தனர். இது, உலக அளவில் திருக்குறள் ஒப்பித்தலில் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஐன்ஸ்டீன் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ...