இந்தியா

இந்தியாசெய்திகள்

இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு 12 நாட்கள் தனிமை!

இந்தியாவில் இருந்து அபுதாபிக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு, அபுதாபிக்கு வந்தவுடன் அவர்கள் கட்டாயமாக 12 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று எதிகாத் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.   இது குறித்து தேசிய எதிகாத் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அபுதாபி அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை கமிட்டி கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளியிட்டுள்ள தனிமைப்படுத்துதலுக்கான விதிமுறைகளை தற்போது மாற்றியமைத்து உள்ளதாகவும், அதன்படி பசுமை நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற...
இந்தியாசெய்திகள்

ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட் கிரையோஜெனிக் எஞ்சினில் கோளாறு…திட்டம் தோல்வி – இஸ்ரோ தலைவர் சிவன்

விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பயணம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ராக்கெட்டின் கிரையோஜெனிக் எஞ்சின் பகுதியில் ஏற்பட்ட சிக்கலால் திட்டம் தோல்வியடைந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பூமி கண்காணிப்புக்காக 2 ஆயிரத்து 268 கிலோ எடை கொண்ட ஈ.ஓ.எஸ்.03 என்ற செயற்கைகோளை வடிவமைத்து இருந்தது. இந்த செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப் 10 ராக்கெட்டில் பொருத்தி இன்று அதிகாலை...
இந்தியாசெய்திகள்

ஆப்கனின் மஜர்-இ-ஷரிப் நகரிலிருந்து இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற மத்திய அரசு தீவிரம்

தாலிபான் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மஜர்-இ-ஷரிப் நகரத்திலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து பல இடங்களில் தாக்குதல் நடத்திவரும் தாலிபான்களிடம் சிக்காமல், அந்தப் பகுதியிலிருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற மத்திய அரசு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்துள்ளது. ஆப்கனில் பதற்றமான பகுதிகளிலில் உள்ள இந்தியர்களை மீட்டு, பத்திரமாக தாயகத்துக்கு கொண்டுவர வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே ஆப்கானிஸ்தான்...
இந்தியாசெய்திகள்

ஓபிசி மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல்

ஓபிசி பட்டியல் தயாரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. அரசியல் சாசனத்தின் 127வது பிரிவு திருத்த மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் 386 உறுப்பினர்கள் வாக்களித்தனர். மழைக்காலக் கூட்டத் தொடரில் முதல் முறையாக, செவ்வாயன்று, மக்களவையில் எதிர்க்கட்சிகளின் தொடர்முழக்கம் நிறுத்தப்பட்டு, இதர பிற்படுத்தப்பட்டோர் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இந்த மசோதா, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை தயாரிக்க மற்றும் மாற்றம் செய்ய மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு...
இந்தியாசெய்திகள்

லடாக்கில் மத்திய பல்கலை. அமைக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

லடாக்கில் மத்திய பல்கலைக்கழகம் அமைப்பதற்கான திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. லடாக் யூனியன் பிரதேசத்தில் மத்திய பல்கலைக்கழகம் அமைப்பதற்காக மத்திய பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா 2021 மக்களவையில் கடந்த வாரம் நிறைவேறியது. மாநிலங்களவையில் நேற்று இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதத்தில் பதிலளித்த கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ''லடாக்கில் இப்போது மத்திய பல்கலைக்கழகம் இல்லை. லடாக், லே பகுதிகளில் மாணவர்களுக்கு தரமான உயர் கல்வி அளிக்கப்பட வேண்டும்...
இந்தியாசெய்திகள்

ஓபிசி பிரிவினரை கண்டறிய மீண்டும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேற்றம்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினரை (ஓபிசி) கண்டறிந்து பட்டியல் தயாரிக்க மாநில அரசுகளுக்கு மீண்டும் அதி காரம் அளிக்கும் 127-வது சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் அளித்த தீர்ப்பில், சமூக,பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என்றும் மத்திய அரசுக்கே அதிகாரம்...
இந்தியாசெய்திகள்

இன்று முதல் வாரச்சந்தைகள் திறக்க அனுமதி -கெஜ்ரிவால் அறிவிப்பு..!

டெல்லியில் இன்று முதல் வாரச்சந்தைகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு. டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதை முன்னிட்டு, பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று முதல் வாரச்சந்தைகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மக்களின் வசதிக்காகவும், வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் சந்தைகளை திறக்க அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும்...
இந்தியாசெய்திகள்

மாணவர்கள் மனதளவில் பாதிப்பு…பள்ளிகளை திறக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கவனிக்காமல் விட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எனவே பள்ளிகளை விரைவில் திறப்பதே நல்லது என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. நாடுமுழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு முதலே பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வகுப்புகள் நடந்தாலும் அது மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை. வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பதால் மாணவர்களின் இயல்பில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. செல்போன், லேப்டாப்பும்...
இந்தியாசெய்திகள்

மழைக்கால கூட்டத் தொடரின் 3-வது வாரத்தில் மாநிலங்களவையில் 8 மசோதா நிறைவேற்றம்

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கடந்த வாரம் மட்டும்8 மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. மழைக்கால கூட்டத்தொடரின் 2-வது வாரத்தை விட 3-வது வாரத்தில் அலுவல் பணிகள் அதிகரித்துள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19-ம் தேதி தொடங்கியதில் இருந்து பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் விவகாரம் ஆகியவற்றை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியிலும், கூச்சல் குழப்பம் விளைவித்து வருகின்றன. இதனால் இரு அவைகளும் சரியாக நடக்கவில்லை. இதனால் கடந்த 3...
இந்தியாசெய்திகள்

கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் இலவச தரிசனம்: திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்

திருப்பதி தேவஸ்தான அலுவ லகத்தில் நேற்று 'டயல் யுவர் இ ஓ' எனப்படும் தொலை பேசி மூலம் பக்தர்களிடம் குறைகளை கேட்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி பக்தர்களின் குறைகளைக் கேட்ட பின்னர் கூறியதாவது: சித்தூர் மாவட்ட ஆட்சியர் ஹரி நாராயணனின் பரிந்துரையின் பேரில் தினமும் குறைந்தபட்சம் 1,000 பக்தர்களையாவது இலவசதரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதனை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்....
1 58 59 60 61 62 82
Page 60 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!