இந்தியா

இந்தியா

கர்நாடகாவில் கோயிலுக்குள் நுழைந்த தலித் இளைஞருக்கு அபராதம்: அர்ச்சகர் உட்பட 8 பேர் கைது

கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் உள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் கங்காதர் (24). தலித் வகுப்பை சேர்ந்த இவர் கடந்த 14-ம் தேதி கரடகி கிராமத்தில் உள்ள மஹாலட்சுமி கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்தார். பூஜை முடிந்து அவர் வெளியே வந்ததைப் பார்த்த கோயில் அர்ச்சகர் பசவராஜ், பதிகர் கரடகி கிராமத்தை சேர்ந்த ஊர் பெரியவர்கள் ரேவண்ணா சுவாமி, சேகரப்பா, சரணப்பா, பிரஷாந்த், பசவராஜ், கடப்பா நாயக்...
இந்தியா

விவசாயிகளுக்கு ஆதரவாக பஞ்சாப் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. விவசாயிகள் சார்பில் பந்த் நடைபெற்றதையொட்டி பஞ்சாப் அமைச்சரவையின் அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஆதரிப்பதாக தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்றும் உணவு பாதுகாப்புக்கு எதிரானது என்றும் பஞ்சாப் முதலமைச்சர் சரஞ்ஜித் சிங் சன்னி கருத்து தெரிவித்தார். இந்த சட்டங்களை...
இந்தியா

ஆந்திரா-ஒடிஷா இடையே நேற்று இரவு கரையை கடந்தது குலாப் புயல்- அதிகாலையில் வலுவிழந்தது!

வங்கக் கடலில் உருவான குலாப் புயல் நேற்று இரவு ஆந்திரா- ஒடிஷா இடையே கரையைக் கடந்தது. குலாப் புயல் கரையைக் கடந்த போது மணிக்கு 95 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. குலாப் புயல் கரையை கடந்த நிலையில் ஆந்திரா, ஒடிஷாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இக்காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும்...
இந்தியா

இன்று பாரத் பந்த்! வேளாண் சட்டங்களுக்கு எதிராக திரளும் மக்கள்!!

மூன்றுவேளாண்சட்டங்களுக்குஎதிராகநாடு முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன . இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன . மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ், இந்திய...
இந்தியா

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பேரவைக்கு குதிரை வண்டியில் வந்த கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள்

கர்நாடக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 13-ம் தேதி தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வை கண்டித்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காந்தி சிலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்நிலையில் நேற்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா, முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர் உள்ளிட்ட...
இந்தியா

குஜராத் சட்டப்பேரவைக்கு முதல் பெண் சபாநாயகராக நிமாபென் ஆச்சார்யா தேர்வாகிறார்

குஜராத் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்து வந்த ராஜேந்திர திரிவேதி, மாநில பாஜக அரசின் புதிய அமைச்சரவையில் அமைச்சராக பதவி ஏற்றார். இந்நிலையில், குஜராத் சட்டப்பேவையின் மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 27-ம் தேதி கூடுகிறது. காலியாக உள்ள சபாநாயகர் பதவிக்கு பெண் எம்எல்ஏ நிமாபென் ஆச்சார்யா பெயரை பாஜக அறிவித்தது. சபாநாயகர் பதவிக்கு நிமாபென் ஆச்சார்யா சார்பிலும், துணை சபாநாயகர் பதவிக்கு பாஜக எம்எல்ஏ ஜேதா பர்வத் சார்பிலும் சட்டப்பேரவை...
இந்தியா

மம்தா தேசிய தலைவராக விரும்புகிறார். ஆனால் அவர் முதலில் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.. மத்திய அமைச்சர் கிண்டல்

மம்தா பானர்ஜி ஒரு தேசிய தலைவராக விரும்புகிறார். ஆனால் அவர் முதலில் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று மேற்கு வங்கம் கொல்கத்தா சென்று இருந்தார். அங்கு ஹர்தீப் சிங் பூரி செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: முதல்வர் மம்தா பானர்ஜி மிகவும் பதற்றமாக உள்ளார். மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்றால்...
இந்தியா

பிரதம மந்திரி டிஜிட்டல் சுகாதார இயக்கம்: வரும் 27-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

நாடு தழுவிய பிரதம மந்திரி டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா கூறியுள்ளார். இதுகுறித்து மாண்டவியா நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 'பிரதமர் மோடி கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் 'தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம்' என்ற புதிய பிரச்சாரம் தொடங்கப்படும் என அறிவித்தார். இதன்படி ஒவ்வொரு இந்தியருக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும்....
இந்தியா

சித்து முதல்வர் ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் செய்வேன்: அமிரீந்தர்சிங் ஆவேசம்

சித்து முதல்வர் ஆவதை தடுக்க எந்த தியாகத்தையும் செய்வேன் என பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமிரீந்தர்சிங் தெரிவித்துள்ளார்.பஞ்சாபில் காங்., கட்சியில் முன்னாள் முதல்வர் அமிரீந்தர்சிங், சித்து இடையே ஏற்பட்ட உள்கட்சி மோதலில் அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். சண்டிகரில் கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் காங்., முன்னாள்...
இந்தியா

தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் பெண்களை அனுமதிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாதுகாப்புப் படையில் பெண்களுக்கும் நிரந்தர பணி வழங்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், ''பாதுகாப்புப் படையில் பெண்களுக்கும் நிரந்தர பணி வழங்க வேண்டும். அதற்கேற்ப தேசியபாதுகாப்பு அகாடமி (என்டிஏ) நடத்தும் நுழைவுத் தேர்வில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும்'' என்று மத்திய அரசுக்குஇடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்த...
1 49 50 51 52 53 82
Page 51 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!