இந்தியா

இந்தியா

உ.பியில் மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா..! அதிர்ச்சியில் பாஜக!!

நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 403 தொகுதிகளை கொண்ட மாநிலம் என்பதால், உத்தர பிரதேச தேர்தல் நாடு முழுவதும் உற்று நோக்கப்படுவது வழக்கம். தேர்தல் தேதி அறிவிப்பால் உத்தர பிரதேசத்தில் தேர்தல் களம் அனல் பறக்கத்தொடங்கியுள்ளது. உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது....
இந்தியா

அயோத்தியில் யோகி ஆதித்யநாத்; தேர்தல் குழு விரைவில் முடிவு

உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில், முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி தொகுதியில் போட்டியிட பா.ஜ., தேர்தல் குழு முடிவெடுக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா உள்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் பிப்., 10 முதல் மார்ச், 7 வரை பல கட்டங்களாக நடைபெற உள்ளது.இதில், உத்தர பிரதேசத்தில் பிப்., 10 மற்றும் 14 தேதிகளில் நடைபெற உள்ள முதல் இரு கட்ட தேர்தலில் பா.ஜ.,...
இந்தியா

பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது

பிரம்மோஸ் ஏவுகணையின் அதிநவீன ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது. இந்தியாவின் மிக சக்திவாய்ந்த ஏவுகணையான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்திய கடற்படையின் தகவலின்படி, இந்த ஏவுகணை மேற்கு கடற்கரை கடலில் சோதனை செய்யப்பட்டது. பிரம்மோஸ் ஏவுகணை துல்லியமான இலக்கை அழித்தது. கடலில் இருந்து ஏவப்படும் பிரம்மோஸ் ஏவுகணையின் நான்கு வகைகள் உள்ளன. முதலாவது போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட...
இந்தியா

சமாஜ்வாதியில் இணைந்தார் உ.பி. அமைச்சர்: தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவு

உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பாஜகவின் முக்கிய தலைவராக கருதப்பட்ட சுவாமி பிரசாத் மவுரியா நேற்று அகிலேஷ் சிங் யாதவை சந்தித்து அவரது சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். கேபினட் அமைச்சராக தொழிலாளர் துறைக்கு பொறுப்பு வகித்த இவர் முன்னதாக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இது ஆளும் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஏனெனில், ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த...
இந்தியா

சட்டப்பேரவை தேர்தலில் கோவாவில் காங்கிரஸ் வெற்றி பெறும்: 40 இடத்தில் 20 கிடைக்கும் என கணிப்பு

அடுத்த மாதம் நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, பாஜவை தோற்கடிக்கும் என தேர்தல் நிபுணர்கள் கணித்துள்ளனர். உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் அடுத்த மாதம் 14ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடக்க உள்ள 5 மாநில தேர்தலில் பஞ்சாப் தவிர மற்ற 4 இடத்திலும் பாஜ...
இந்தியா

புதுச்சேரியில் பொங்கல் கொண்டாட்டங்களுக்குத் தடையில்லை

இந்தியாவில் தினமும் 10 ஆயிரத்துக்கு கீழே பாதிப்பு ஏற்பட்டு கொரோனா 2-வது அலை இறுதிக்கட்டத்தை அடைந்து வந்த நேரத்தில், இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்தது. அதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் மறுபடியும் காட்டுத்தீயாக பரவத் தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப்...
இந்தியா

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்; தொகுதிக்கு ஒரு வாக்குச் சாவடியை முழுக்க பெண்களே நிர்வகிக்க ஏற்பாடு: தலைமை தேர்தல் ஆணையம் தகவல்

தேர்தலின் போது ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு வாக்குச் சாவடியை, முழுக்க பெண்களே நிர்வகிக்க ஏற்பாடு செய்யப்படும். இந்த புதிய திட்டம் நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் முதல் முறையாக கொண்டு வரப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தராகண்ட் ஆகிய 5 மாநில தேர்தல் தேதியை நேற்றுமுன்தினம் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட...
இந்தியா

இத்தாலியில் இருந்து வந்த 173 பயணிகளுக்கு கோவிட்: ஆய்வகம் மீது விசாரணைக்கு உத்தரவு

இத்தாலியிலிருந்து பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் வந்த 173 விமான பயணிகளுக்கு கோவிட் தொற்று இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. பயணிகள் பலரும் அதனை தவறான முடிவு என குற்றம்சாட்டியதால் ஆய்வகம் மீது விமான நிலைய ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அமிர்த்சர் ஸ்ரீ குருராம் தாஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த வெள்ளியன்று இத்தாலியின் ரோம் நகரிலிருந்து பயணிகள் வந்தனர். அவர்கள் பயணத்திற்கு முன்பு கோவிட் பரிசோதனை செய்து நெகடிவ் என...
இந்தியா

கொரோனா உச்சகட்டம்…ஒரே நாளில் 1.59 லட்சம் பேர் பாதிப்பு;327 பேர் பலி!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 327 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,55,28,004 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,623 ஆக உயர்வு. கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 17,000 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,55,28,004 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த...
இந்தியா

80 சதவீதத்துக்கும், 20 சதவீதத்துக்கும் இடையே நடப்பதுதான் உ.பி. தேர்தல்: ஆதித்யநாத் பேச்சு: எதிர்க்கட்சிகள் கண்டனம்

உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் தேர்தல் என்பது, 80 சதவீதம் பேருக்கும், 20 சதவீதம் பேருக்கும்இடையிலான தேர்தலாக இருக்கும். இதில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் 80 சதவீதம் பேர் இந்துக்களும், 20 சதவீதம் பேர் மட்டுமே முஸ்லிம்களும் உள்ளனர். இதை சுட்டிக்காட்டி ஆதித்யநாத் பேசியுள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி...
1 28 29 30 31 32 82
Page 30 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!