இந்தியா

இந்தியா

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 62 ஆக நிர்ணயம்: ஆந்திர அமைச்சரவை முடிவு

ஆந்திர மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆந்திர மாநில அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் அமராவதியில் நேற்று நடந்தது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் பி.வெங்கட் ராமய்யா கூறியதாவது: கரோனா...
இந்தியா

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு கர்நாடகா எதிர்ப்பு

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் கூறியதாவது: ரூ.4,600 கோடிமதிப்பில் 2-வது கட்ட ஒகேனக்கல்கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு முன்பாக உச்ச நீதிமன்றத்திலும், காவிரி மேலாண்மைஆணையத்திலும் தெரிவிக்கவில்லை. கர்நாடக தமிழக எல்லையான ஒகேனக்கலில் தமிழக அரசுதன்னிச்சையாக இத்தகைய பணிகளை மேற்கொள்ள முடியாது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படியே தமிழக அரசு செயல்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தின்...
இந்தியா

2 நாட்களாக நடந்த அமலாக்கத்துறை சோதனை: பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் வீடுகளில் ரூ.8 கோடி பறிமுதல்

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் வீடுகளில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.8 கோடியும் மற்றொரு இடத்தில் நடந்த சோதனையில் ரூ.2 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது. பஞ்சாபில் சட்ட விரோதமாக செயல்பட்ட மணல் குவாரிகள் மீதும், அவற்றுடன் தொடர்புடையவர்கள் மீதும் கடந்த 2018-ம் ஆண்டில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், பண பரிமாற்ற மோசடி புகாரின் பேரில் அமலாக்கத் துறையினரும் கடந்த நவம்பரில் தனியாக வழக்கு...
இந்தியா

இணையதளம், யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படும் இணையதளங்கள், யூடியூப் சேனல்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அதிரடியாக எச்சரித்துள்ளது. காலப்போக்கில் நாள்தோறும் இணையதளங்கள், யூடியூப் சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் சிலவை எந்த தகவலையும் உறுதிப்படுத்தாமல் அவர்களுக்கு தோன்றியவற்றை வெளியிடுகின்றன. இதனால் பதற்றமான சூழல் உருவாகுதல், அவதூறு, பொய்யான தகவல்களை பரப்புதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இதற்கு தீர்வுகாண நீண்டகாலமாக பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த...
இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்.. பட்ஜெட் குறித்து ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.. இந்த கூட்டத்தில் நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், 2022-23ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 31-ந் தேதியிலிருந்து தொடங்க இருக்கிறது. 2022-23ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாகவும் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஜனவரி 31-ந் தேதியிலிருந்து...
இந்தியா

கரோனா காரணமாக குடியரசு தின விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்கவில்லை: டெல்லியில் ட்ரோன்கள், பாரா கிளைடர்கள் பறக்க தடை

கரோனா பரவல் காரணமாக வரும் குடியரசு தின விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்கவில்லை. நாடு முழுவதும் வரும் 26-ம்தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. தலைநகர் டெல்லியில் நடைபெறும் விழாவில் வெளிநாட்டு தலைவர் கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம். கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கரோனா பரவல் காரணமாக அவர் விழாவில் பங்கேற்கவில்லை....
இந்தியா

அலங்கார ஊர்தி நிராகரிப்பு விவகாரத்தில் மத்திய அரசு விளக்கம்

குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது . டெல்லியில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின நிகழ்ச்சியில் செல்லும் வாகனப் பேரணியில் தமிழ்நாடு , கேரளா , ஆந்திரப் பிரதேசம் , மேற்கு வங்க மாநிலம் ஆகிய மாநிலங்களின் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . இந்த விவகாரம் தேசிய அளவில்...
இந்தியா

டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் ரஃபேல் உட்பட 75 விமானங்கள் பங்கேற்கும்: இந்திய விமானப் படை அறிவிப்பு

டெல்லி ராஜபாதையில் இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் 75 விமானங்கள் பறந்து செல்லும்என விமானப் படை அறிவித்துள்ளது. இந்தியா இந்த ஆண்டு 73-வது குடியரசு தினத்தை கொண்டாட உள்ளது. இந்த விழாவில் தலைமை விருந்தினர்களாக பங்கேற்பதற்காக கஜகஸ்தான், கிர்கிஸ்தான்,தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 மத்திய ஆசிய நாடுகளின் பிரதிதிகள் டெல்லி வந்து சேர்ந் துள்ளனர். கடந்த ஆண்டு நாட்டின் 75-வதுசுதந்திர தின விழா கொண்டாடப்...
இந்தியா

டாவோஸ் மாநாடு: இன்று பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை

'ஆன்லைன்' வாயிலாக இன்று(ஜன.,17) துவங்கி ஐந்து நாட்கள் நடக்கும் உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷீ ஜிங்பிங் ஆகியோர் இன்று சிறப்புரை ஆற்றுகின்றனர்.ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்த மாநாடு நடக்கவில்லை. 2022க்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது 'ஒமைக்ரான்' வகை தொற்று பரவல் உலகையே அச்சுறுத்தி...
இந்தியா

புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் காலமானார்

கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகாராஜ் காலமானார். அவருக்கு வயது 83. நேற்றிரவு, டெல்லியில் உள்ள தனது வீட்டில் பேரப்பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். வீட்டில் உள்ளோர் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கே அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பண்டிட் பிர்ஜு மகாராஜ் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். சமீப காலமாக சிறுநீரகக் கோளாறு காரணமாக பிர்ஜு மகாராஜ் டயாலிசிஸ் சிகிச்சைப் பெற்றுவந்தார்...
1 27 28 29 30 31 82
Page 29 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!