‘ஆங்கிலத்திற்கு மாற்று மொழி இந்தி மொழிதான்’: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சால் சர்ச்சை
நாட்டில் வெவ்வேறு மொழிகளை பேசும் மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும் போது ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவின் 37வது கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய அவர், நாட்டின் ஆட்சி மொழியே அலுவல் மொழி என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். இந்தி மொழியின் முக்கியத்துவத்தை நிச்சயமாக...