உலகம்

உலகம்

அஜ்மானில் அமீரக தேசிய தின கொண்டாட்டம்

அஜ்மான் : அஜ்மான் இந்தியன் அசோஷியேசனில் அமீரகத்தின் 53வது தேசிய தினம் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அஜ்மான் இந்திய சங்க தலைவர் அப்துல் சலா, பொதுச் செயலாளர் ரூப் சித்து, சாயாதேவி உள்ளிட்டோர் தலைமையில் பொதுமக்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. இதில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்....
உலகம்

பஹ்ரைன் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது

பஹ்ரைன் மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் அமைப்பும், வுமன் அக்ராஸ் அமைப்பும் சேர்ந்து, ஹித் பகுதியிலுள்ள குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையத்தின் தலைவரான மாமா பாஸ்மாவைச் சந்தித்தார். மாற்று திறனுள்ள குழந்தைகளுக்காக, அசையாத அன்பு மற்றும் அர்ப்பணிப்புடன் சேவை செய்து வரும், மாமா பாஸ்மா எல்லாவற்றிலும் எளிமையும், கருணையும் கொண்டு செயல் பட்டுவரும் விதம் உண்மையிலேயே போற்றத்தக்கது. மாமா பாஸ்மா பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியாவின் தொலைக்காட்சி...
உலகம்

அமீரகத்தில் நடைப்பெற்ற கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகமது முகைதீன் எழுதிய ‘சிட்டுக்குருவி’ நூல் திறனாய்வு உள்ளிட்ட முப்பெரும் விழா

கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ.முகமது முகைதீன் எழுதிய 'சிட்டுக்குருவி' நூல் திறனாய்வு, முன்னாள் மாவட்ட நீதிபதி அ. முகமது ஜியாவுதீனுக்கு ' சர்வதேச மனித நேய மாண்பாளர்" விருது மற்றும் 'கல்விச் சுடர்' 'தாயகத்தின் நாயகர்கள்' நூல்கள் வெளியீடு, தேசிய கல்வி அறக்கட்டளை சார்பில் அன்னை மொழி அறிவோம் அமைப்பில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு பரிசளிப்பு என முப்பெரும் விழாவாக துபாய் எமிரேட்ஸ் ஸ்டார்ஸ் ஹோட்டல், மீட்டிங் ஹாலில் கோலாகலமாக கடந்த...
உலகம்

துபாயில் “எளியோர் எழுச்சி நாள்” விழா திமுக அயலக அணி கொண்டாட்டம்! அமீரகத் திமுக அமைப்பாளார் , எஸ். எஸ். மீரான் ஏற்பாடு.

துபாயில் 27/11/24 புதன் கிழமை அன்று, அமீரகத் திமுக சார்பில் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள லேண்ட்மார்க் கிராண்ட் ஹோட்டலில் 'கேக்' வெட்டி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  பிறந்தநாள் விழாவுக்கான சிறப்பு அலங்காரமாகக் கறுப்பு, சிவப்பு பலூன்களால் புதுமையாகவும் வித்தியாசமாகவும் மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. அமீரகத் திமுக அமைப்பாளரும்,அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினருமான எஸ்.எஸ்.மீரான் அவர்களின்...
உலகம்

செயற்கை நுண்ணறிவு அறிவியலில் புதிய கண்டுபிடிப்பு தமிழக மாணவி சாதனை: அமீரக அரசு பாராட்டு

முஹம்மத் பின் ராஷித் அரசு கண்டுபிடிப்பு மையம் மற்றும் முஹம்மது பின் ராஷித் நிதியகம் இணைந்து கல்வி அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் நடத்திய இளம் மாணவ மாணவிகளின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் திட்டத்தின் பல்கலை கழக அளவில் நடந்த இறுதி சுற்றில் தமிழக மாணவி ரீம் செய்யது அபுதாஹிர் தலைமையிலான குழு முதலிடம் பெற்று சாதனை நிகழ்த்தியது. அதற்கான பரிசு தொகை முப்பதாயிரம் திர்ஹம் காசோலை தமிழக மாணவி ரீம் அபுதாஹிர்...
உலகம்

அமீரக குறும்பட விழா 2025 : ஏப்ரல் மாத நிகழ்வில் பங்கேற்க கதைகள் வரவேற்கப்படுகிறது!!

கற்பனை வளம் மிக்க அமீரக எழுத்தாளர்களுக்கு சவாலாக அமைவது, தங்களின் கதை தேர்ந்தெடுக்கப்பட்டு அதனை ஒரு குறும்படமாகவும் எடுத்து போட்டியில் வெல்லும் மிக மகிழ்வான தருணமான அமீரக குறும்பட விழா! பீதி மிகுந்த கொரோனா கால கட்டமான 2020 ல் தொடங்கிய இந்த விழாவில், இப்போது அதை கடந்த பின்பும், எழுத்தாளர்களும் இயக்குனர்களும் தொடர்ச்சியாக பங்கு கொள்வது ஆர்வத்தை குறிக்கிறது. இவ்வருட நிகழ்விற்கும், தமிழில் தட்டச்சு செய்த முழுமையான கதை...
உலகம்

அசர்பைஜானில் சத்குருவிற்கு ராஜ மரியாதை!

Cop-29 என்ற காலநிலை மாற்றம் குறித்த ஐநாவின் சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக சத்குரு அசர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ளார். அசர்பைஜானின் அறிவியல் மற்றும் கல்வி அமைச்சகத்தின் தலைமை அதிகாரி மற்றும் பிற அரசு அதிகாரிகள், ஹைதர் அலியேவ் சர்வதேச விமான நிலையத்தில் சத்குருவிற்கு சிறப்பான வரவேற்பினை அளித்தனர்....
உலகம்

அசிஸ்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது ‘உலக திருக்குறள் மாநாடு 2024’

உலக திருக்குறள் மையம் புதுச்சேரி மற்றும் உலகத்தமிழர்கள் இணைய வழி பேரவை துபாய் இணைந்து நடத்திய 'உலக திருக்குறள் மாநாடு 2024' அசிஸ்ட் உலக சாதனை நிகழ்வு நவம்பர் 8ஆம் தேதி காலை 9:30 மணிக்கு தொடங்கி நவம்பர் 9ஆம் தேதி காலை 9:30 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சி அசிஸ்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. நிகழ்ச்சியில் திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகழ்நிலைப் பல்கலைக்கழகம் துணை...
உலகம்

43 வது ஷார்ஜா பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் முனைவர் ஆ.முகமது முகைதீன் எழுதிய ‘சிட்டுக்குருவி’ குழந்தைகளுக்கான நூல் வெளியிடப்பட்டது

ஷார்ஜா : சமூக ஆர்வலரும், பேச்சாளரும், கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவருமான முனைவர் ஆ.முகமது முகைதீன் எழுதிய 'சிட்டுக்குருவி' குழந்தைகளுக்கான நூல், நவம்பர் 8 ஆம் தேதி வெள்ளிகிழமை மாலை 6.30 மணிக்கு 43 வது ஷார்ஜா பன்னாட்டு புத்தகக் கண்காட்சி வளாக அரங்க எண் 7 ல் வெளியிடப்பட்டது. சம உரிமை இதழ் ஆசிரியர் பேச்சாளர் திரு.எஸ்.எம்.இதாயத்துல்லா தலைமை தாங்கி நூலை வெளியிட்டார்.  துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தின்...
உலகம்

ஷார்ஜாவில் கவிஞர் இதயா எழுதிய ‘அகர மலர்கள்’ கவிதை நூல் வெளியீடு

ஷார்ஜா : ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் நடந்து வரும் 43வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் தமிழகத்தை சேர்ந்த புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.  இதில் அமைந்துள்ள யுனிவர்ஷல் பப்ளிஷர்ஸ் அரங்கில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் பரமக்குடி கவிஞர் இதயா எழுதிய ‘அகர மலர்கள்’ கவிதை நூலை கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் தலைவர் முனைவர் ஆ. முகமது முகைதீன் வெளியிட அதன் முதல் பிரதியை இஸ்லாமிய இலக்கியக் கழக பொருளாளர்...
1 2 3 63
Page 1 of 63

Right Click & View Source is disabled.

error: Content is protected !!