இலக்கியம்

இலக்கியம்

கவிதை

ரத்தன் நவால் டாட்டா

வணிகத்துறை நன்மதிப்பு வணிகன் மாசாத்துவான்! படைப்புப் பலபடைத்த பெருஞ் செல்வந்தன்! உயரிய உளம்கொண்ட உயர்ந்தோங்கிய செல்வந்தன்! வரும் வரவினை வையகத்துக் காற்றியவன்! அகவை காணாது ஆயிரவருட நண்பனைக் கொண்டனன்! கலங்கிய உயிருக்கு கருணை காட்டினன்! கால்நடை மருத்துவமனை கால்நடைகளுக்கு ஈந்தனன்! பெருமக்கள் மனதை பெரிதுமாண்ட பெருமகன்! மக்களுக்காக வாழ்ந்த மனிதநேய மனிதன்! என்றென்றும் நம் மனதில் ரத்தன் நவால் டாட்டா - கீதா அருண்ராஜ்...
கவிதை

பொன் ஒன்றும் தேவை இல்லை இந்த மழலைக்கு முன்

பொன் ஒன்றும் தேவை இல்லை இந்த மழலைக்கு முன் “ பொன் “ ஒன்றும் தேவை இல்லை இருளில் உருவாகி இரவைப் பகலாக்கி கருவில் வடிவெடுத்து கண்ணுக்கு விருந்தாகி மகிழ்ச்சி கடலில் மூழ்க வைத்த உறவே விழியில் நிலவொளி தந்து நொடியில் எமைக் கவர்ந்து மடியில் மலர்ந்து மனம் எங்கும் மணம் பரப்பி கொடியில் மலராத முல்லைப்பூவே உன் பிஞ்சுக் கைகளை தொடும் சுகம் வென் பஞ்சையும் மிஞ்சும் நீ...
கட்டுரை

ஒரு பக்க கட்டுரை : வாழ்க்கை ஒரு நதி

நெல்லை கவி க.மோகனசுந்தரம் அன்பு நண்பர்களே... நம் வாழ்க்கையை நதியைப் போலத்தான் வாழ வேண்டும். அந்த நதியைப் போல வாழ கற்றுக் கொண்டால் வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. ஏனெனில் நதி தான் போகும் பாதைக்கேற்ப வளைந்து நெளிந்து செல்லும். அதுபோல நாமும் நம் பயணத்தில் வரும் ஏற்ற தாழ்வுகளுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொண்டு பயணித்தால் துன்பத்திற்கு இடமில்லை. நதிகள் தான் செல்லும் பாதையில் குறுக்கே பாறைகள் இருந்தால் தடைப்பட்டு...
நிகழ்வு

முனைவர் மரிய தெரசா வின் 300 ஆவது நூல் வெளியீட்டு விழா

29.09.2024 அன்று முனைவர் மரிய தெரசா வின் 300 ஆவது நூல் முனைவர் ரா.ராஜேஸ்வரி, எம்.ஓ.பி.வைணவ மகளிர் கல்லூரி அவர்கள் சிறப்பு விருந்தினராக நூலை வெளியிட, திருமிகு. என். ஆர். தனபாலன் அவர்கள் முன்னிலை வகுத்து நூலைப் பெற்றுக்கொண்டார்கள். 50 வகைமையில் 300 நூல்கள் வெளியிட்டு இலக்கிய உ லகில் நிலையான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார் என்பது உறுதியாகும். கவிஞர். இரா. உமா பாரதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்....
சிறுகதை

பணத்தால் அடித்தாலும் வலிக்கும்

''நீ சின்ன பொண்ணும்மா... உனக்கு அந்த பையனோட அழகும், வேலையும் மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும். அதுக்கு மேலயும் நிறைய விஷயங்கள் இருக்கு. அதை புரிஞ்சுக்கோ.” “அழகை மட்டும் பார்த்து முடிவு பண்ற அளவுக்கு நான் ஒன்னும் சின்னப் பொண்ணு இல்லைப்பா. எனக்குத் தெரிஞ்ச வரை அவருக்கு பெரிசா கெட்ட பழக்கங்கள் எதுவும் கிடையாது. நல்ல வேலையில இருக்கார். அவர் சொல்றத வச்சுப் பார்த்தா… நல்ல ஃபேமிலின்னுதான் தோணுது. வேற என்ன...
சிறுகதை

சாலியின் பொதுத்தேர்வு பயணம்

பர்வீன் வெளிநாட்டு வாழ் இந்திய பெண்மணி. எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். இவரின் அன்பு கணவர் கடை வைத்து தொழில் நடத்தி வந்தார். இவருக்கு வாரிசுக்கு ஒரு மகன் சாலி, ஆசைக்கு ஒரு மகள் ஜீனத் உண்டு. தான் உயர்கல்வி படிக்கவில்லை என்றாலும் தன் பிள்ளைகளை படிக்க வைத்து விட வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டவர். சாலி மிகவும் சுறுசுறுப்பான சிறுவன். ஆறாம் வகுப்பு 'E' நிலையில் படிக்கும் மாணவன்....
கவிதை

தூக்கணாங்குருவி குடம்பை

நீரிலிருந்தும் அழுகாத நீரின்றியும் வாடாத உடற்பிணி அண்டவிடாத உடற்சூட்டை தணிக்கும் தூய்மையான இடத்தில் செழுமையாக வளரும் துவளாத தூயப்புல் தருப்பை புல்லெடுத்து ஆற்றங் கரையோரத்தில் அரவம் வரமுடியாத வரிசையாக உயர்ந்து வளர்ந்து நிற்கும் தென்னை, பனை, ஈச்ச மரத்தின் உச்சியிலே குடுவை போன்று குடம்பை கட்டி வீசப்போகும் பருவக்காற்றுக்கு நேர்எதிர் திசையில் குறுகிய நுழைவு வாயில் வைத்து இரண்டாக வகுத்து ஈரறைகள் அமைத்து ஓரறைஅம்மையப்பருக்காம்மற்றோரறை குஞ்சுகுறுமன்களுக்காம் சிறுசிறு களிமண் உருண்டைகளை...
கட்டுரை

ஒரு பக்கக் கட்டுரை : நேரத்தை நேசியுங்கள்

நெல்லை கவி க.மோகனசுந்தரம். அன்பு நண்பர்களே... நமது வாழ்க்கையே ஒரு குறிப்பிட்ட காலம் தான். காலம் பொன் போன்றது என்பார்கள். என்னைப் பொறுத்தவரை பொன்னைக் கூட சற்றுக் கூடுதல் விலை கொடுத்தாவது வாங்கி விடலாம். தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். ஆனால் காலத்தை -இழந்த நேரத்தை ஏன் ஒரு நொடிப் பொழுதை நம்மால் வாங்க முடியுமா? வாழ்க்கையில் வென்றவர்கள் எல்லாம் நேரத்தை வென்றவர்கள். எல்லாம் அவர் நேரம்!... என்று நாம் சுலபமாக...
கவிதை

நடிப்புக்கொரு சிவாஜி

தமிழ்த் திரையுலகுக்கு அவனொரு சீதனம்... ஒன்பான் சுவைகளையும் கடந்த ஒப்பற்ற நூதனம்... அவன் மவுனத்துக்கும் சிங்கத்தின் கர்ஜனை உண்டு... அவன் கர்ஜனைக் குரலுக்குள்ளம் கடலின் ஆழம் உண்டு... அவன் குனிந்து நடிக்கும் காட்சியிலும் நடிப்பு நிமிரும்... இமயம் போல் உயரும்.. அவன் பணிவுகளில் மக்கள் அரங்கம் ஓங்காரமாய் மகிழ்ச்சிக்குரல் எழுப்பும்.... கலைஞரின் பேனா அவனால் கவுரவம் பெற்றது... கலைஞர் வசனம் பேசிப்பேசி கடைக்கோடித் தமிழன் நெஞ்சிலும் தமிழ் மணம் கமழ்ந்தது......
சிறுகதை

பெற்றால் தான் பிள்ளையா?

" நீயும் வந்துட்டு வாயேன் பவி".. என்றான் சந்திரன். 'அதெல்லாம் வேண்டாம்..நீங்க மட்டும் போயிட்டு வாங்க..' என்றாள் பவித்ரா. 'ஜனனியாவது கூட்டிட்டு போயிட்டு வரேன்..' என்றான் சந்திரன். 'அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..சின்ன பிள்ளையை அங்கெல்லாம் கூட்டிட்டு போய்கிட்டு..' வழக்கம் போல சிடுசிடுத்தாள் ... பவித்ரா. பேச ஒன்றும் வழி இல்லாமல் சரி என்றான் சந்திரன். புருஷோத்தமன் - மீனாட்சி அம்மாள் தம்பதியினரின் ஒரே மகன் சந்திரன். வசதி வாய்ப்புகளுக்கு கொஞ்சமும்...
1 2 3 4 5 6 45
Page 4 of 45

Right Click & View Source is disabled.

error: Content is protected !!