சிறுகதை

சிறுகதை

அழைப்பு மணி!

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி கொண்டிருந்தது. அன்று சனிக்கிழமை மதியம் நேரம் 2.50.... அந்த பிரபலமான ஜவுளிகடைக்கு நானும், மனைவியும் சென்றோம். ஜவுளிகடையின் வாசலின் வெளியே கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த ஒருவர் எல்லோரையும் வரவேற்று கொண்டிருந்தார். குழந்தைகளுக்கு பலூனும், சாக்லெட்டும் கொடுத்து உற்சாகப்படுத்தினார். நாங்களும் அவரை கடந்து ஜவுளிகடைக்குள் நுழைந்தோம். குளிரூட்டபட்ட அந்த பெரிய ஹால், மதியம் வெயிலுக்கு இதமாக இருந்தது. இரண்டாவது மாடியில் மனைவிக்கான புடவையை எடுத்து கொண்டிருந்தேன்....
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி- 38

தேவி கேள்வி கேட்டுக் கொண்டிருக்க........ மௌனமாய் இருந்த கார்குழலி சிறிது நேரத்தில் பேச ஆரம்பிக்கிறாள். "என்னை மன்னித்துவிடு" "நான் என்ன கேட்கிறேன் நீ என்ன பதில் சொல்கிறாய்???" "நீ கேட்பதற்கு தான் நான் பதில் சொல்கிறேன். "என்னை மன்னித்துவிடு" "என்ன சொல்கிறாய்???" "ஆமாம்! நான் செய்த தவறுக்கு தான் மன்னிப்பு கேட்கிறேன். எனக்கும், செழியனுக்கு ம் திருமணம் நடந்துவிட்டது. நான் ஆரம்பத்திலேயே அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று அவரிடம் இந்த...
சிறுகதை

கடற்கரை காற்று!

மனைவி, மகன், மகளுடன் கடற்கரையில் அமர்ந்திருந்தோம். மாலைநேரம் என்பதால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மகனும், மகளும் செல்போனில் கடலின் அழகை படம்பிடித்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் பெரியவர் ஒருவர் எங்கள் அருகே வந்தார். " தம்பி... அரிசி முறுக்கும், சூடான சுக்கு காபியும் வேணுமா...?" என்று கேட்டார். நான் அவரை பார்த்தேன். " வேண்டாம் பெரியவரே... நீங்க கிளம்புங்க..." என்று சொன்னேன். " தம்பி... உங்க...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 37

எப்பொழுதும் போல தேவி செழியனின் அலுவலக பையை திறக்க அதில் கார்குழலி யின் கைகுட்டை இருக்க என்னவென்று புரியாமல் திகைத்தாள். இதை தன் கணவனிடம் கேட்கலாமா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருந்தாள். மறுபடி இரண்டு நாள் கழித்து அவனது பையை திறக்க அதில் மீண்டும் ஒரு புடவை இருந்தது. இதை தேவி பார்த்துக்கொண்டிருக்கும்போதே...செழியன் வந்துவிடுகிறான். உடனே அவன் இது உனக்காக தான் வாங்கி வந்தேன் கொடுக்க மறந்துவிட்டேன் என்று சமாளிக்கிறான்....
சிறுகதை

சிறு துளி!

பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தேன். எனது பக்கத்து இருக்கையில் இளம்வயது வாலிபரும், பெண்ணும் அமர்ந்திருந்தனர். இருவரும் தோளில் ஒரு பெரிய பேக்கும் வைத்திருந்தனர். இருவரும் தங்களிடம் இருந்த பணத்தை எண்ணிக் கொண்டனர். எண்ணிய பணத்தில் முப்பது ரூபாய் குறைவாக இருந்தது. இருவருக்கும் ஒரே பதட்டம். படம் தவறியதா...?. அல்லது செலவு செய்தோமா...? என்று யோசிக்க ஆரம்பித்தனர். " பிரதர்... நீங்க தாகமாக இருக்குன்னு ஒரு இளநீர் குடிச்சீங்க... மறந்திட்டீங்களா...?" என்று கேட்டாள்....
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 36

அன்று மாலை மருத்துவர்களின் பரிந்துரை படி வீட்டிற்கு சரவணன் வருகிறார். மருத்துவர் சொன்ன அனைத்து விஷயத்தையும் வீட்டிலுள்ள அனைவருக்கும் சொல்லி எச்சரிக்கை செய்கிறான் செழியன். அவருக்கு எந்தவித அதிர்ச்சி தரக்கூடிய விஷயத்தையும் சொல்லவே கூடாது என்று அனைவருக்கும் எச்சரிக்கிறான். சரவணனிடம் செழியன் "நீங்கள் கொஞ்சநாள் ஓய்வெடுங்கள்.... கடையை நான் ஒரு ஆள் வைத்து பார்த்துக் கொள்கிறேன். வேலை முடித்துவிட்டு வந்த மீதமான நேரங்களில் நானே கடையை பார்த்துக் கொள்கிறேன். அதனால்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் -தொடர்: பகுதி- 35

அன்று இரவு முழுவதும் மருத்துவமனையிலேயே தந்தையுடன் இருக்கிறான். செழியன். அடுத்த நாள் காலை சரவணனுக்கு தேவையானவற்றை கவிதாவும், லட்சுமியும் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வருகிறார்கள். அங்கு செழியனை வீட்டில் போய் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு மதியம் வருமாறு கேட்கிறாள் லட்சுமி. அதற்கு செழியன் "இப்போது எனக்கு ஓய்வு தேவை இல்லை அதனால் இங்கேயே குளித்துவிட்டு தந்தையுடன் இருக்கிறேன். நான் அவரைப் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் இருவரும் அவரை பார்த்து விட்டு...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் -தொடர் : பகுதி -34

அடுத்த நாள் காலை திருமணம் இன்று இரவு முழுவதும் தூக்கம் வராமல் ஒருவித அச்ச உணர்வுடன் அமைதியாகப் படுத்திருந்தான் செழியன். மனைவி உறங்கிக் கொண்டிருக்கும்போது அவள் முகத்தை பார்க்கும் அவன் மனதுக்குள் குற்ற உணர்வு ஏற்படுகிறது. இருப்பினும் தான் செய்வது சரி என்று அவனே சமாதானம் செய்து கொள்கிறான். அப்படியே அதிகாலை விடிய குளித்து முடித்துவிட்டு தயார் செய்த பெட்டியை எடுத்துக்கொண்டு "நேரமாகிறது நான் கிளம்புகிறேன். நான் திரும்பி வர...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்- தொடர் : பகுதி – 33

எப்பொழுதும் வேலை முடிந்ததும் சீக்கிரமாக வந்து மகளுடன் நேரத்தைக் கழிக்கும் செழியன் சிறிது நாட்களாக கார்குழலி உடன் நேரத்தை செலவிட்டான். வீட்டிற்கு தாமதமாக செல்ல ஆரம்பித்தான். தேவியுடனும் பேசுவது குறைகிறது. செழியனிடம் சென்று தேவி பேசுகிறாள். "நான் உங்களுடன் சிறிது நேரம் பேச வேண்டும். ஏன் எப்பொழுதெல்லாம் தாமதமாக வருகிறீர்கள்??? வந்தாலும் என்னிடம் நீங்கள் அவ்வளவாக பேசுவது இல்லை??? எதனால் இந்த மாற்றம்??? என் மீது ஏதேனும் தவறு இருந்தால்...
சிறுகதை

நிலாவில் பார்த்தது – எஸ்.ராஜகுமாரன்

அப்பாவின் நண்பர் மகனுக்கும் நண்பர் ஆக முடியுமா?  எனக்கு அப்படி ஒருவர் ஆனார். அவர்தான் யுவசிற்பி.  பதின் பருவத்தில் எல்லோருக்கும் ஒரு மனிதர் ரோல் மாடலாக இருப்பார்.  அவரை மாதிரி நாமும் ஆக வேண்டும் என்ற பாதிப்பை ஏற்படுத்துவார்.  யுவசிற்பி என் ஆழ்மனதின் நாயக பிம்பம். அவர் உருவத்தை உங்களுக்கு மிக எளிதாக விளக்கி விடலாம். ஓஷோவின் நகலன்.  அதே தாடி. அதே வழுக்கை. அதே ஒளிமயமான கண்கள். அதே...
1 2 3 4 5 6 9
Page 4 of 9

Right Click & View Source is disabled.

error: Content is protected !!