கவிதை

கவிதை

“கைக்கூலிகளுக்கு மத்தியில் இவன் ஒரு மேய்வேலி’ : திப்பு சுல்தான்

தேசத்திற்கு தப்பிட்டவர்கள் மத்தியில் சுதந்திர வேட்கை எனும் உப்பிட்டவன் இவன்... துப்பு கெட்டவர்கள் மத்தியில் தேசத்தை உயிருக்கு மேலாக ஒப்பிட்டவன் இவன்... திப்பு - மனிதர்களில் ஒரு புனிதன்.. மன்னர்களில் ஒரு மாமணி.... வீரத்தால் சிறந்தவன் - நெஞ்சின் ஈரத்தால் நிறைந்தவன்... அடுத்தவர்க்கு உதவும் - உப காரத்தால் இனித்தவன் - எதிரிகளை மேல் கொண்ட காரத்தால் தனித்தவன்.... தேசத்தை நேசிப்போர்க்கு திப்புவின் வீரம் பிடிக்கும்... பிடிக்காதவர்க்குத்தான் உள்ளமெல்லாம் அரிக்கும்.......
இலக்கியம்கவிதை

இதயம் பேசுகிறது!

பாழ்வெளியான‌ மனப்படுதாவில்‌ கனவுத் தூரிகையால்‌ வரைந்த ‌கைகளின்‌ வாரிசு‌ யார்‌?! விழிகள்நடத்திய‌ அழகுப்போட்டியில்‌ மிரண்ட முகத்திற்குப்‌ பொட்டு‌ வைத்துக்‌ கனவுகளை எல்லாம்‌ வெற்றி கொள்ள வைத்தவை எந்த‌ இதயத்தின்‌ கீறல்கள்‌?! நான் கொய்த கனிகளின் நறுமணச்‌ சாறுகள்‌ பின்பு முகத்தின்‌ கைகளில்‌ என்கைகளிலோ‌ முள்ளின்‌ கீறல்கள்‌.. குயில்களின் கனவு‌ வானத்தில்‌ கழுகுக் கூட்டங்களின்‌ வட்டங்கள்‌ கழுகுகளை‌ வீழ்த்தும்‌ என்‌ கண்மணியே‌ நீ வாழ்க‌! என் உள்ளத்தில் உன்னை அங்கீகரிக்கின்றன! எஸ் ஆர்...
இலக்கியம்கவிதை

யாழ் ராகவன் – கவிதைகள்

தலையாட்டித்தான் வரவேற்கின்றன ஒவ்வொரு இலைகளும் உன்னை காணாத நாள் இலையுதிர் காலம் கருப்பு குழல்அருவியின் சீரான பரவலில் உற்சாக மடைந்தது மாமரக்குருவி வனமெங்கும் கூவல் தாவர பாஷையும் பறவையின் ஓசையும் எங்கு படித்தாய்.. பூக்களையும் சினுங்கவைக்கும் புன்முறுவல் காண ஓடிவரும் தட்டானிடம் பறக்கும் உல்லாசம் கண்மூடி நிற்கும் போதெல்லாம் ஞானநிலை கண்திறந்து பார்த்தால் மோனநிலை.. காற்றுக்கும் பூவுக்கும் காதல் மூட்டுகிறாய் காலத்தை வெல்லும் ஜாலத்தை பார்வையில் தீட்டுகிறாய்.. உரிமை மீட்பு...
இலக்கியம்கவிதை

தேடுதல்!

தேடுதல் வேண்டும் எதைத் தேடுகிறோம்...? எதைத் தேட வேண்டும் ?? கர்ப்பப்பையில் இருக்கும் போது அந்த இருட்டில் இருந்து வெளிச்சத்தில் வர பாதையை தேடுகின்றோம்! பிறந்தாயிற்று! வெளிச்சத்தை பார்த்தாயிற்று! ! தொப்புள் கொடியில் இருந்து பிரிந்தவுடன் பசி என்று நினைவுக்கு வரும்பொழுது தாயின் முந்தானையை தேடுகின்றோம்! அம்மாவின் குரலோ வயிற்றில் இருக்கும் பொழுதே கேட்டாயிற்று. அம்மா சொல்லிக் கொடுத்து அப்பா என்று தெரிந்த பின் அப்பாவின் குரல் எங்கெங்கெல்லாம்ஒலிக்கிறதோ ...அந்த...
இலக்கியம்கவிதை

லதா கவிதைகள்

தையலை உயர்வு செய் பெண்மை போற்றும் பாரதமே பேரின்ப பொருளாய் காணாதே தாய்மை ஒன்றே உலகினில் தலைமை என்று மறவாதே... குடும்பம் ஒன்றே கடவுளாய் குடிலைச் சுற்றித் தவமிருப்பாள் குயிலுக்கும் குரல் கொடுப்பாள் கூகைக்கும் பதில் சொல்வாள்... ஆணுயர தலைகுனிந்து ஆதாரமின்றி அடையாளமானவள் ஆசையின்றி சிகரம் தொட்ட மீசையில்லாப் பாரதியவள்... நிகரென்று யாருமில்லை சமமென்று வாழும் பெண்மணிகள் சிகரமென்று உயர்த்திப் போற்றிடுவோம் வரமென்று வாழ்த்தி வணங்கிடுவோம்... பெண் பெண்ணுக்கும் மீசையுண்டு...
கவிதை

லதா கவிதைகள்

ஆண் சுவாசம் உலகத்தின் முதல் மனிதனே குற்றத்தின் முதல் தண்டனையனே பரிகாரமில்லா முதல் பாவமோ பரிகாசம் தேடாத முதல் யாசகனோ விழியால் நேர்ந்த முதல் உயிர்ப்பில் விழிமூடுவரை கொடுக்கும் முதல் தர்மன் காதல் விளைவின் முதல் கண்ணீர் காற்றோடு பேசாத முதல் சுவாசகன் கலையா ஓவியனின் முதல் கற்பனை காவிய உலகம் இவன் படைப்பன்றோ..‌‌ ஆண் பூ எதிர்மறை வாசமோ எதிரியில்லா சுவாசமோ ஏகாந்த மகரந்தமோ இவன்... எவர் நிலையறிய...
கவிதை

ருத்ர தாண்டவம்

பிரம்மா படைப்புக் கடவுள் மகா விஷ்ணு காக்கும் கடவுள் சிவன் முக்தி கொடுக்கும் கடவுள் தர்மங்கள் சிதையும்போது அவதாரம் எடுப்பேன் என்றான் கண்ணன் கீதையில்! கலியுகத்தில் தர்மம் இல்லை! பாவங்கள் நிரம்பிப் பெருக்கெடுக்கின்றன பொய்,வஞ்சகம்,சூது , திருட்டு என்று எதிலும் குறைவில்லை! தலைவிரித்தாடுகிறது அதர்மம்! கடவுள் நம்பிக்கையும் காலாவதியாகும் இந்தக் காலத்தில்---- கொரானா வடிவில் ஒரு அவதாரம்! இதன் வடிவைக் காணும்போது ருத்திராக்ஷம் நினைவு நிழலாடுகிறது! சிவபெருமானின் ஆபரணம்! இந்த...
கவிதை

பூத்து சிரித்தது மொழிகளின் மலர்

உன் செல்ல சொல்லில் பூத்து சிரித்தது மொழிகளின் மலர் பூமியில் வெண் ஒளியாய் நிறம் பதித்த இளம் மஞ்சள் நிலா நீ கடவுள் எழுதிய குறுங்கவிதையின் உயிர் ஹைக்கூவின் தொடர் செல்லமாய் கன்னம் திருடும் முத்தங்களின் முதல்வி மழலைகளின் அரசி கருவறை தேசத்தின் ஆனந்த சுதந்திரம் நெஞ்சில் சாய்ந்த தேவதையின் பிம்பம் தாய்மை பரிசளித்த வாழ்வியலின் முதன்மை சீதனம் பொம்மைகள் ஆளும் குழந்தைகளின் இளவரசி அம்மாவின் மகாராணி இருள் புதைத்து...
கவிதை

திறக்காத கதவில்…

வாழ்வின் வட்டத்தை நேரம் நொடி நொடியாய் ஒடித்து சுழல்கிறது தூளியில் ஆடுகிறது குழந்தையின் உயிர் பசியின் விரலில் இறப்பின் கை தெருவில் இரண்டு பூக்கள் வாசம் வாடி சாய்கிறது உலகம் பாலருந்தும் குழந்தையின் வயதை வறுமை அருந்தி சுவைக்கிறது அண்ணன் தாயானான் தம்பி சேயானான் மனிதம் குருடானது யாசகம் வாசலில் குழந்தைகளின் சத்தம் திறக்காத கதவில் எழுதியிருந்தது இறைவன் இருக்கிறான் என்று... கவிஞர் பாக்கி...
கவிதை

உள்ளங்களே உழவனின் அகம்

புத்தரிசி பொங்கலில் வெண்மையாய் பொங்குது வாழ்வு பொங்கல் உள்ளங்களே உழவனின் அகம் சுவைக்க சொல்லுங்கள் பொங்கலோ பொங்கல் புலர்ந்த சூரிய கதிர்களில் பொங்கி ஒளிர்கிறது பொங்கல் திருநாள் வெளிச்சம் காலத்தின் தோரணையில் மஞ்சள் நிறம் படர்ந்து இயற்கையின் உதட்டில் பூசணிப்பூ பதித்து வாழ்வெங்கும் வருகிறது தைத்திருநாள் புன்னகை கரும்பின் இனிப்பில் பொங்கி வழிகிறது மங்காத நல்வாழ்வின் தைச்சுவை தை உழவர் திருநாள் தமிழர் பெருநாள் தை துன்பத்தை நறுக்கி மகிழ்வை...
1 7 8 9 10 11 16
Page 9 of 16

Right Click & View Source is disabled.

error: Content is protected !!