கவிதை

கவிதை

ஹைக்கூக் கவிதைகள் – பட்டியூர் செந்தில்குமார்

1. பூத்திருக்கும் தும்பைச் செடியில் அதோ! பறந்து போகும் பட்டாம்பூச்சி வாசம் 2. செடியில் வண்ணத்துப்பூச்சி பிடிக்க ஓடும் சிறுமியின் மடியிலிருந்து விழும் பூக்கள் 3. கைகட்டி நடுங்கியபடி பார்த்துக் கொண்டிருக்கிறேன் மலரில் பனித்துளிகள் 4. மாடு தொலைந்த இரவு தேடி அலையும் திசையெல்லாம் கேட்கும் மணியோசை 5. குளிர்கால அதிகாலை பனிமலைகள் பனிமலைகள் அடடா, பாலைவன மணல்மேடுகள் 6 நெகிழிப் போத்தல் தண்ணீரைக் குடிக்கும்போதெல்லாம் சலசலக்கும் ஒரு நதி...
கவிதை

மஞ்சுளா யுகேஷ் – கவிதை

கனவு கண்டேன் கனிவான இதயங்கள் கவலையற்ற மனிதர்கள் களிப்பான முகங்கள் காண கனவு கண்டேன் கண்டங்கள் தாண்டியும் அண்டங்கள் தேடியும் கண்ட கனவு போல் கிடைக்காதா என ஏங்கியே கனவு கண்டேன் எங்கும் கிடைக்கவில்லை எளிதில் சிக்கவில்லை என்ன இது சோதனை என இறைவனை கேட்பது போல் கனவு கண்டேன் கடகடவென சிரித்து கடவுள் சொன்னார் புறக்கண்ணால் பார்க்காதே புலப்படாது என்றார் அகக்கண்ணால் பார் அனைவரும் நல்லவரே ஆனந்தம் மிக்கவரே...
கவிதை

சிவகங்கா கவிதை

யாரோ நீ நான் தேடிய நீ நீயில்லை... நீயே தவறு செய்துவிட்டு நீயே உன்னை மன்னித்துக் கொள்வாயெனில் பின் நானெதற்க்கு? அத்தனை அன்பையும் ஒரே நொடியில் கரைத்துவிட இப்பெருங்கடல் இருக்கையில் உன்னில் கரைந்து விட ஏன் துடிக்கிறது இச்சிறு இதயம்? உன் விரல் தீண்டிய கைகளை ஏனோ நனைக்க பிடிக்கவில்லை... விடை பெறுகையில் உணர்வுகளை என் கையில் திணித்துவிட்டு விரல்களை மட்டும் பிரித்துக்கொண்டாய்.... சொல்லி தீரவதில்லை உனக்கான வார்த்தைகள் எப்பொழுதெல்லாம்...
கவிதை

ஆய்க்குடியின் செல்வன் கவிதைகள்

# 1 வலித்திடாத தேகம் வேண்டும் கூடவே கூட்டில் அடைபடாத மனமும் ! மனமே, நின் மணம் எங்கே எங்கோ விழுந்து அங்கேயே நாதியற்று கிடைபிணம் ஆனாயோ கிழிசல்களற்ற ஒற்றை முடி கொண்டேனும் என் இதயம் தைத்துக்கொடுத்துவிட்டு போயேன் எங்கேனும் வாழ்ந்துவிட்டு போகட்டும் நானும் நானும் ! #2 தொலைந்து போக கரைகள் தேவையில்லை அலைகள் போதுமாயிருக்கின்றது! #3 ஏதோ ஒரு திசையில் பறக்கும் பொருட்டு இறகுகள் அமைக்கப்படுவதில்லை இரைகளும்...
கவிதை

‘நான்’-மெழுகுவர்த்தி பேசுகிறேன்

'நான்' -  மெழுகுவர்த்தி பேசுகிறேன் .....   உங்கள் எல்லாவற்றிலும் நான் இருக்கிறேன்... என்னை நீங்கள் எப்போதும் மறுதலிக்க முடியாது... ஏசு பெருமானிடமும் இருந்தேன்... யூதாசிடமும் இருந்தேன்... காந்தியியின் ஆஸ்ரமத்திலும் அதேவேளை கோட்சேக்களின்  கூடாரங்களிலும்... நீண்ட தாடி - தொப்பிக்காரர்களிடமும் எனக்குத் தோழமை உண்டு... எனக்கு நல்லவர்  கெட்டவர் பாகுபாடில்லை... நானும் கண்ணனின் புல்லாங்குழல் போலத்தான்... எடுப்பவர் கைகளில் இழுத்தபடி வளைவேன்... மிதவாதிகளிடமும் மதவாதிகளிடமும் எனக்கு நேசமுண்டு... எவருக்காகவும் எவரையும்...
கவிதை

அம்மாவும் அழகான பையனும்

அம்மாவும் அழகான பையனும்   அம்மா ஏன் கழற்றி வைத்துள்ளாய் இப்பொழுதெல்லாம் தாலி கொடியை.... அக்கறையாக கேட்கும் அன்பு மகனை வாரி அணைத்து விட்டு சொல்கின்றாள்...... அப்பா இல்லையடா அதனால் தான்.... ஆனாலும் நீதானே அப்பாவின் மனைவி... ஆமாம்பா அதிலென்ன சந்தேகம்.... அப்ப ஏன் தாலியை கழட்டி வெக்கனும்...... அறியா சிறுவன் தான் என்றாலும் எத்தனை ஆழமான கேள்விகள் அவனுள்ளும்.... நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்கன்னு சொல்லியே.... வளரவளர அவனை...
1 6 7 8
Page 8 of 8

Right Click & View Source is disabled.

error: Content is protected !!