ஆய்க்குடியின் செல்வன் கவிதைகள்
# 1 வலித்திடாத தேகம் வேண்டும் கூடவே கூட்டில் அடைபடாத மனமும் ! மனமே, நின் மணம் எங்கே எங்கோ விழுந்து அங்கேயே நாதியற்று கிடைபிணம் ஆனாயோ கிழிசல்களற்ற ஒற்றை முடி கொண்டேனும் என் இதயம் தைத்துக்கொடுத்துவிட்டு போயேன் எங்கேனும் வாழ்ந்துவிட்டு போகட்டும் நானும் நானும் ! #2 தொலைந்து போக கரைகள் தேவையில்லை அலைகள் போதுமாயிருக்கின்றது! #3 ஏதோ ஒரு திசையில் பறக்கும் பொருட்டு இறகுகள் அமைக்கப்படுவதில்லை இரைகளும்...