கட்டுரை

சிறகடிக்கும் பட்டாம்பூச்சி – நூல் அறிமுகம்

210views
நூலின் பெயர் : சிறகடிக்கும் பட்டாம்பூச்சி
நூல் ஆசிறியர் : சு.பிரவந்திகா ( 7 வயது )
வகுப்பு : 2
வெளியீடு : லாலிபாப் சிறுவர் உலகம்
கொரோனா பொது முடக்கத்தின் போது பத்தக நண்பன், லாலிபாப் சிறுவர் உலகம், KTS,முகிழ் போன்ற புலனக் குழுக்கள் குழந்தைகளுக்கு இனைத்து பல இனைய நகழ்வுகளை நடத்தினர். கொரோனா காலத்தை வசந்த காலமாய் மாற்றியுள்ளனர்.
இந்த குழுக்களில் இனைந்து தான் வாசித்த கதைகளை சொல்லி வந்த மழலை பிரவந்திகா தானாகவே கதைகள் எழுதவும் தொடங்கியுள்ளார்.
இந்நூலில் 12 சிறுகதைகள் உள்ளது. கதைகள் அனைத்திற்கும் சிறுவர்களே ஓவியம் வரைந்திருப்பது கூடுதல் சிறப்பு.
பூச்சிகளுக்கு இடையில் யாரு இராணி என்று போட்டி வருகிறது. மற்றவர்களுக்காக உழைத்து வாழ்வதே சிறந்த தலைமைப் பண்பு என்பதைச் சுட்டி காட்டி உள்ளார் ‘பூச்சி இராணி யாரு?’ என்ற கதையில்.
‘மயக்கமானக் கன்னுக்குட்டி’ என்ற கதையில், அதிக வெயிலால் தண்ணி கிடைக்காமல் மயங்கிய தன் நண்பன் கன்றுக் குட்டியைக் காப்பாற்ற நினைக்கிறது சேவல். சூரியனை மறையச் சொல்லி கூவுகிறது. ‘நீ கூவினால் சூரியன் உதிக்கத்தானே செய்யும்’, என்கிறான் பள்ளி செல்லும் இனியன். தன் பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுத்து கன்றுக் குட்டியைக் காப்பாற்றுகிறான். விடுமுறையில் மரம் நட வேண்டும் என்று நினைத்தவாறு பள்ளி செல்கிறான். மரம் வளர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வைக் கதையாகக் கொடுத்துள்ளார்.
‘கதிரவன் வளர்த்த மாமரம்’ என்ற கதையில், விளையாட்டாய் எத்தித் தள்ளிய மாங்கொட்டை பள்ளத்தில் விழுகிறது. மண்னால் மூடிவைகிறான். தவலையில் ஆலோசனைப் படி தினமும் நீர் ஊற்றுகிறான். கொட்டை முளைக்கிறது. முளைத்த மாங்கன்றை வளர்க்கும் கதிரவன், வளர்ந்து பெரியவன் ஆகிறான். தான் வளர்த்த மாமரமும் வளர்ந்து பழங்கள் தருகிறது. ஆளுக்கு ஒரு மரமாவது வளர்க்க வேண்டும் என்கிறார் நம் சுட்டி பிரவந்திகா.
குழந்தைகள் நாய்க் குட்டி, பூனைக் குட்டிகளை செல்ல பிராணிகளாக வளர்ப்பது வளக்கம். இந்த கதையில் அம்முவுக்கு காகம் தான் செல்ல பிராணி. மிக்சர் இல்லாமல் சாப்பிட மறுக்கும் காகங்கள். காகம் சாப்பிடாம நானும் சாப்பிட மாட்டேன் என கோபித்துக் கொள்ளும் அம்மு. இரண்டு பேரும் சமாதானமாகிச் சாப்பிடுவதே மிக்சர் கேட்ட சுப்பிரமணி காக்கா என்ற கதை.
மறந்து போன ‘குலை குலையா முந்திரிக்கா’ விளையாட்டை நினைவுபடுத்தி இருக்கிறார் சிறகடிக்கும் பட்டாம்பூச்சி என்ற கதையில். இப்படியாக தன் கற்பனைச் சிறகுகளை விரித்து இந்நூலைப் படைத்துள்ள பிரவந்திகா சிறகடிதக்கும் பட்டாம்பூச்சியாய் பல படைப்புகளைப் படைக்க வாழ்த்துகள்…

சரண்யா சண்முகம்,
ஈரோடு

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!