இலக்கியம்நிகழ்வு

“ஆதிராவின் மொழி ” நூல் வெளியீடு

249views
ஷார்ஜாவில் நடைபெற்ற 41 வது சர்வதேச புத்தக கண்காட்சியில் அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமம் ஒருங்கிணைத்த கேலக்ஸி பதிப்பகத்தின் வெளியீடாக ஆதிராவின் மொழி என்ற நூல் கடந்த நவம்பர் 11 ஆம் தேதி மாலை 4 மணி முதல் 4:25 வரை வெளியிடப்பட்டது.
எழுத்தாளர் சிவமணி அவர்களின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்து இருக்கிறது ஆதிராவின் மொழி.

Booktopia நிறுவனர் திருமதி. மலர்விழி அவர்கள் வெளியிட, அமீரக எழுத்தாளர்/சமூக ஆர்வலர் திருமதி. ஜெஸிலா பானு அவர்கள் பெற்று கொண்டார்கள்.
அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமத்தின் சார்பாக திரு. பிலால் அலியார், எழுத்தாளர். சுரேஷ், எழுத்தாளர் சிவசங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

எழுத்தாளர் சசி S குமார் நூல் அறிமுகம் செய்தார்கள். அந்த நூலைப் பற்றி சொல்லும் போது பெண் அயல்நாட்டில் வேலை செய்யும் போது படும் வலியை “நீர்க்குமிழிகள்” என்ற கதையில் சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பதாக சொல்லி ஆரம்பித்தார். ஒரு சிக்கன் கடையில் இருந்து கொண்டு பையனை நினைத்து வருந்தும் தாயின் மனநிலை படிக்கையில் கண்களில் நீர் வரவழைத்ததாக சொன்னார். கனவுகள் ஆயிரம் என்ற கதையில் தன் அம்மாவையே சரியாக கவனிக்காத பிள்ளை பற்றி மிக அழகாக, ஆழமாக பதிவு செய்து இருப்பதாக பாராட்டினார்.

அர்த்தநாரி என்ற சிறுகதையில் நான்சி மனதில் நின்று வாழ்கிறார். முளைப்பாரி என்ற சிறுகதை கிராமத்து சூழலுக்கே அழைத்து சென்றது. அபிராமி அந்தாதியில் டாக்ஸியினால் ஏற்படும் மன உளைச்சலை கதைக்களமாக அமைத்தது வெகு சிறப்பாக இருந்தது. எழுத்து வசப்பட்டு இருக்கிறது. இந்த பணியை தொடர்ந்து செய்யுமாறு வலியுறுத்தினார்.மென்மையுணர்வு இருந்தாலும், அழுத்தமாகவும் உள்ள புத்தகம் என்று நூல் அறிமுகத்தை நிறைவு செய்தார்.
எழுத்தாளர் சாந்தி சண்முகம் அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்.
சிறப்பு விருந்தினர் மலர்விழி அவர்கள் பேசும் போது ‘அட்டைப்படம் மிகப் பிரமாதமாக இருப்பதாகவும் அன்றே படித்து விட வேண்டும் ஆசை இருப்பதாக உறுதிமொழியையும் மேடையிலேயே தந்தார்.

எழுத்தாளர் ஜெஸிலா பானு பேசும் போது இந்த புத்தகத்தின் கடைசி கதை அபிராமி அந்தாதி. அந்தாதி என்றால் துவக்கம் என்று சொல்வார்கள். அவரின் எழுத்துப் பணிக்கு இந்த விழா துவக்கமாக இருக்கட்டும் என்றார்.
கேலக்ஸி பதிப்பகத்தின் நிறுவனர் பாலாஜி, காலச்சுவடு பதிப்பகத்தார் மைதிலி கண்ணன் ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கிப் பேசினார்கள்.

எழுத்தாளர் சிவமணி ஏற்புரையில் அனைவருக்கும் நன்றி சொல்லி ஆரம்பித்தார். தானாக எதுவும் செய்யவில்லை என்றும், தன்னை வளர்த்து விட்ட மனிதர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பதையும் பதிவு செய்தார்.

 

ஒரு படைப்பாளனுக்கு பதிப்பகத்தாரே அழைத்து, எனது பதிப்பகத்தில் புத்தகம் போடுங்கள் என்று சொல்வதே எழுத்தாளனுக்கு பாக்கியம் என்றார். அமீரகத்தில் விழா நடந்ததால், அவரது தாய், தந்தையர் வர இயலாமல் போனதைச் சொல்லி, விருந்தினர் பெயர் தனது தாயின் பெயராக அமைந்ததில் பெரும் மகிழ்ச்சி என்று சொல்லி நெகிழ வைத்தார். நிகழ்ச்சி வெகு சிறப்பாக நிறைவடைந்தது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!