தமிழகம்

நெல்லை புத்தக திருவிழாவில் அரசு அருங்காட்சியகம் சார்பில் அழகிய கலை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

110views
நெல்லையில் நடைபெற்று வரும் “பொருநை நெல்லை” புத்தக திருவிழாவில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பயிற்சி பட்டறையில் கண்ணாடி பாட்டிலில் ஓவியம் வரைதல் பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியினை நெல்லை அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி துவங்கி வைத்தார். பயிற்சியில் கழிவுப் பொருள்களில் இருந்து கலைப் பொருள்களை தயாரிக்கும் பயிற்சியாக கண்ணாடி பாட்டிலில் அழகிய ஓவியம் வரைந்து அதை கலைப் பொருளாக மாற்றும் பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியினை கைத்திறன் பயிற்றுனர் செல்லம்மாள் நடத்தினார். இப்பயிற்சியில் தூய இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி மற்றும் சாராள் தக்கர் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மிகவும் ஆர்வத்துடன் கண்ணாடி பாட்டிலில் ஓவியங்கள் வரைந்தனர். பயிற்சியில் பேராசிரியர்கள் மேரி சுகிர்தா பாண்டியன், செல்வ ஸ்ரீ மற்றும் அருங்காட்சியக பணியாளர் உலகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் புத்தக திருவிழாவில் இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு கலைநயம் மிக்க பொருள்களை தயாரிக்கும் பயிற்சி மற்றும் சணல் கொண்டு அழகிய பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்புகள் நெல்லை அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தலைமையில் நடத்தப்பட்டது. இப் பயிற்சியினை நிவேதா, சந்த் பியாரி, சக்திஸ்வரி ஆகியோர் இணைந்து நடத்தினர். ராணி அண்ணா கலைக் கல்லூரியின் மாணவிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு சணல் கொண்டு அழகிய கலைநயமிக்க கீ செயின் , பர்ஸ் போன்ற பொருட்களை தயாரிக்கும் பயிற்சிகளை மேற்கொண்டனர். இப்ப பயிற்சியில் ராணி அண்ணா கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியர்கள் விசாக லக்ஷ்மி , ஐரிஷ் மார்க்கெட் மற்றும் அருங்காட்சியக பணியாளர் உலகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!