தமிழகம்

அரசு குளிர்பதன கிடங்குகளின் பயன்பாடுகள் குறித்து வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

42views
குள்ளபுரம் வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி 4ஆம் ஆண்டு மாணவர்கள் கிராம தங்கல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒரு பாகமாக சுருளிபட்டியில் உள்ள விவசாயிகளுக்கு அரசு குளிர்பதன கிடங்குகளின் பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர். அரசு குளிர்பதன கிடங்குகள் குறித்து மாணவர்கள் கூறியதாவது,”அறுவடை செய்த விளைபொருட்களை பாதுகாக்க விவசாயிகளிடத்தில் சரியான குளிர்பதன சேமிப்பு கிடங்குகள் இல்லாததால் விளைபொருட்கள் அழுகி வீணாகிறது. எனவே விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனை தடுக்க தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு முழுவதும் 187 குளிர்பதன கிடங்குகள் நிறுவியுள்ளனர்.
இதில் கம்பத்தில் மட்டும் 2 குளிர்பதன கிடங்குகள் 25 மற்றும் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்டதாக உள்ளது. இதனால் விளைபொருட்களின் வைப்புக்காலத்தை அதிகரிக்க முடியும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.    இவ்விழிப்புணர்வை கம்பம் குழு மாணவர்களான சக்திவேல், காளிராஜன், ஆல்பின் சாபு, நந்தகுமார், மோகன், சிவனேசன், மணி கிருக்ஷ்ணா, மூவேந்திரன், ராஜா, விஜய் ஆனந்த், ஸீ கோகுல் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் ஏற்படுத்தினர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!