தமிழகம்

பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வு காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனையில் புதிதாய் பிறந்த குழந்தைகள் வாரக் கொண்டாட்டம்

284views
ஒவ்வோர் ஆண்டும் நவ.15 – 21 வரையிலான ஏழு நாட்கள் புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் வாரமாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதை முக்கிய முன்னுரிமை தேவைகளில் ஒன்றாக முன்னிறுத்தவும், இதுதொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்த வாரத்தை அனுசரிக்கிறது. நடப்பாண்டில் இந்த வாரத்திற்கான கருப்பொருள் “பாதுகாப்பான, தரமான, கவனமான பராமரிப்பு – குழந்தைகளின் பிறப்புரிமை” என்பதாகும்.
இந்த நிலையில், பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனை புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் வாரத்தை கொண்டாடுகிறது. இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு நலம் பெற்ற குழந்தைகள் இது தொடர்பான விழாவில் பங்கேற்றனர்.
அப்போலோ ரீச் மருத்துவமனையில், அண்மையில் பெரிய கர்ப்பப் பை கட்டி இருந்த பெண்ணுக்கு அறுவைசிகிச்சை செய்து ஒரு நாள் ஆன குழந்தையை வெளியே எடுத்தது சாதனையாக அமைந்தது. மேலும் மெகோனியம் ஆஸ்பிரேசன் குறைபாட்டுடன் பிறந்த குழந்தைக்கு சுவாச சிகிச்சை மற்றும் மூளைப் பாதுகாப்புக்கு குளிர்விப்பு சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் சிறப்பான மருத்துவ பராமரிப்பை வழங்கி அப்போலோ ரீச் அந்தக் குழந்தையை காப்பாற்றியது. நரம்பு குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு நலம் பெற்றுள்ளனர்.
குழந்தையின் முதல் 28 நாட்களில் சிகிச்சை அளிப்பது சவாலான ஒன்று. சிகிச்சையில் மிகச் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் அது மூளை மற்றும் அறிவு வளர்ச்சியைப் பாதிக்கக் கூடிய அபாயம் இருக்கிறது. அதனால் பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு சரியான இடத்தை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அப்போலோ ரீச் மருத்துவமனையில், பல்வேறு குறைபாடுகள் கொண்ட 41 பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பான, நவீன மற்றும் மேம்பட்ட சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளோம். இதில் 94 சதவீதம் குழந்தைகள் உயிர் பிழைத்து நல்ல உடல் நிலையில் உள்ளனர் என்று அப்போலோ ரீச் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார்.
இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு காரைக்குடியில் உள்ள அப்போலோ ரீச் மருத்துவமனையில், தலைமை செயல்பாட்டு அதிகாரி (சிஓஓ) நீலக்கண்ணன் தலைமையில் நடந்தது. மருத்துவமனை நிர்வாகி செல்வகுமாரி லாவண்யா, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கோகுலகிருஷ்ணன், மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!