தமிழகம்

ராஜபாளையத்தில் உள்ள பழமையான கோயிலில் கிடைத்த தூண்கள் மற்றும் பட்டய கற்களில் வரலாற்று துறையினர் ஆய்வு நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வரலாறு பயிலும் மாணவர்களுக்கு எழுத்துகளை படி எடுக்கும் பயிற்சி நடத்தப்பட்டது.

106views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் எதிரே இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான பறவை அன்னம் காத்திருளிய சுவாமி கோயில் உள்ளது. இக் கோயில் வளாகத்தில் இருந்த புதர்கள் அகற்றப்பட்ட போது கிடந்த கல் தூண்கள் மற்றும் பட்டய கற்ககள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தூண்களின் வயது மற்றும் கற்களில் செதுக்கப்பட்ட எழுத்துகள் குறித்து மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் தனியார் கல்லூரியின் வரலாற்று துறை மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு பழமையான கல்வெட்டை கண்டறிந்து சுத்தம் செய்யும் முறை, கல்வெட்டுகளை அதற்குண்டான உபகரணங்களை கொண்டு கல்வெட்டு படி எடுக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.
இக் கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் கிடைத்த முதல் கட்ட தகவலின் பேரில், சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் பாண்டியர்களால் கட்டப்பட்ட இக் கோயில் அமைந்துள்ள பகுதி வெண்பைக்குடி நாட்டு கருங்குளமான சாதவாசகநல்லூர் என அழைக்கப்பட்டுள்ளது. முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தியோடு கல்வெட்டு தொடங்குகிறது.

இக்கோயில் முழுவதுமாக இடிந்த நிலையில், கருவறை மட்டும் பிற்காலத்தில் புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. கட்டட கற்கள் மற்றும் தூண்கள் மூலம் இந்த இடத்தில் பெரிய கோயில் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகிறது என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!