தமிழகம்

பேரறிஞர் அண்ணாவின் 54 -வது நினைவு நாளை முன்னிட்டு இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தேர்தல் பணிமணையில் அமைச்சர் கே. என். நேரு தலைமையில் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது

142views
பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகளுக்கு இடையில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 54 -வது நினைவு நாளை முன்னிட்டு இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தேர்தல் பணிமணையில் மாண்புமிகு அமைச்சர் ஐயா. கே. என். நேரு அவர்கள் தலைமையில் அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர், மத்திய மாவட்ட கழக செயலாளர், திருச்சி மாநகர மேயர் ,கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் திரு. சுரேஷ் குமார், திரு சின்னதுரை ஆகியோருடன் கெங்கவல்லி பேரூர் கழக செயலாளர் பாலமுருகன் , மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களும் கெங்கவல்லி பேரூர் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினர்.
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!