தமிழகம்

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ராஜபாளையத்தில் அனைத்து கட்சி சார்பில் மற்றும் சமுதாய பெரியவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

128views
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தென்காசி சாலை அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முன்னால் MP லிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதே போல் விடுதலைச் சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் சரவணன் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் நிகழ்ச்சியில் தொகுதி துணைச் செயலாளர் ஊமைத்துரை தமிழ் வளவன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ் நகர பொருப்பாளர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!