Uncategorizedதமிழகம்

ராஜபாளையம் வட்டாரத்தில் தற்போது நெல்லில் ஆனைக்கொம்பனியை தாக்குதல்

69views
ராஜபாளையம் வட்டாரத்தில் தற்போது நெல்லில் ஆனைக்கொம்பனியை தாக்குதல் காணப்படுகிறது
தாக்குதல் அறிகுறிகள்:
1.புழுக்கள் வளரும் தூர்களை தாக்குகிறது
2.புழுக்கள் தூர்களை துளைத்து உட்சென்று வளரும் பகுதியை உணர்கிறது
3.தாக்கப்பட்ட தூர்களில் நெற்கதிர் வராது மேலும் வளர்ச்சி குன்றி காணப்படும்
4.தாக்கப்பட்ட தூர்கள் வெங்காய இலை போல் அல்லது வெள்ளி தண்டு போல் காட்சியளிக்கும்.
பூச்சியின் விவரம் *முட்டை -இந்த ஈயானது நீளமான உருளை வடிவத்தில் பளபளப்பான வெண்மை அல்லது சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற முட்டைகளை இலையின் அடிப்பகுதியில் தனியாகவோ அல்லது கூட்டாகவோ இடம்.
*புழு -முன் பகுதியில் கூர்மையாக இருக்கும் இவை இலையுறையின் கீழே வர சென்று வளரும் மொட்டுக்குள் நுழைகிறது அவை உண்ட இடத்தை சுற்றி ஒரு முட்டை வடிவ உள்ளிடம் உருவாகும்.
* கூண்டு புழு வெளிவரும் போது அதன் உணர்கொம்புகள் மூலம் குழவினை சுற்றி வெள்ளித் தண்டின் நுனிப்பகுதிக்கு சென்று அதனுடைய பின்பகுதி மற்றும் வெளியே தள்ளி கொண்டு நிற்கும்.
*பூச்சி மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் கொசு போன்ற சிறிதாக காணப்படும் ஆண் ஈக்கள் சாம்பல் நிறமாக இருக்கும் இலையுள் பனித்துளிகளை உட்கொள்ளும்.
கட்டுப்படுத்தும் முறைகள் : 
பொருளாதார சேதார நிலை 10 சதவீதத்துக்கு மேல் வெள்ளித் தண்டுகள் அல்லது வெங்காய இலைகள்
1.புழு ஒட்டுண்ணி பிளாஸ்டிக் கோஸ்டர் உரைசே பயன்படுத்தி ஆனைக் கொம்பன் தாக்குதலை தவிர்க்கலாம்
2.முன்கூட்டியே நிலத்தை உழுதல் வேண்டும்.
3.அறுவடை செய்த பின் நிலத்தை உடனடியாக உழ வேண்டும் பூச்சி உண்ணக்கூடிய மாற்று வகைகளை அகற்ற வேண்டும்.
4.தழைச்சத்து உரங்களை பரிந்துரை செய்யப்பட்ட அளவு மட்டும் பயன்படுத்த வேண்டும்.
5.புற ஊதா விளக்கு வைத்து பூச்சிகளை கவர்ந்து அளிக்கலாம்
6.பாசலோன், கார்போசல்போன், பிப்ரோனில் தயோமிதாச்சியம் இதில் ஏதாவது மருந்தை தெளிக்கலாம்.

எனவே தற்போது ராஜபாளையம் வட்டார விவசாயிகள் தங்கள் நெல் வயலில் ஆனை கொம்பு ஈ தாக்குதல் உள்ளதா என்று அறிந்து இந்த கட்டுப்படுத்தும் முறைகளை பயன்படுத்தி பூச்சியினை கட்டுப்படுத்த ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் திரு திருமலைசாமி அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!