தமிழகம்

அரசு பேருந்து மோதி டூவீலரில் சென்ற 2 பேர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழப்பு

134views
மதுரை மாவட்டம் கூத்தியார் கூண்டில் இருந்து இரவு ஏழு முப்பது மணி அளவில் மதுரை நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தவர் இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த.
விருதுநகர் மாவட்டம் வடமலைகுறிச்சி தெருவை சேர்ந்த சங்கர குருசாமி வயது (56) இவர் கல்யாண புரோக்கராக இருந்து வருகிறார். அவருடன் பின்னால் அமர்ந்து வந்த
 மதுரை பழங்காநத்தம் இருளப்பசுவாமி கோவில் தெருவை சேர்ந்த எலக்ட்ரீசியன் வீரனபாரதி வயது (41) என்பவரும் வந்து கொண்டிருந்தனர் அப்போது பசுமலை ஜெயராம் பேக்கரி அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையம் நோக்கி TN 58 N 0568 என்ற எண் கொண்ட அரசு பேருந்தை ஓட்டி வந்த 52 வயது சுப்புதாமன் என்பவர் எதிர்பாராத விதமாக டூவீலரில் சென்று கொண்டிருந்த சங்கர குருசாமி மற்றும் வீரனபாரதி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருவரும் அரசு பேருந்து சக்கரத்தினுள் உள்ளே சென்றதால் இருவரது தலையிலும் அரசு பேருந்து ஏறி இறங்கியது., இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும். இந்த விபத்தானது அரசு பேருந்தை முந்திச் செல்லும்போது விபத்து நடந்ததா.? அல்லது அரசு பேருந்து முன்னாள் சென்ற டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானதா.? என்பது குறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

விபத்தின் போது வாகனத்தை ஓட்டி இருந்தவர் ஹெல்மெட் அணிந்திருந்தும் அது தரம் இல்லாத ஹெல்மெட் ஆக இருந்ததால் உடைந்து நொறுங்கி தலை மீது சக்கரம் ஏறி அவர் உயிரிழந்துள்ளார இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மட்டுமே ஹெல்மெட் அணிந்து வந்துள்ளார் அதுவும் தரமான இல்லாத ஹெல்மெட்டாக உள்ளது காவல்துறை பொது மக்களுக்கு வைக்கும் கோரிக்கையானது ஹெல்மெட் வாங்கும் பொழுது தரமான ஹெல்மெட்டை வாங்க வேண்டும் எனவும் இருசக்கர வாகனத்தில் இருவர் செல்லும் போது கட்டாயமாக இருவருமே ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் எனவும் மேலும் ஹெல்மெட் அணிந்த பிறகு கட்டாயமாக பெல்ட் ஹெல்மெட்டில் உள்ளதை லாக் செய்ய வேண்டும் எனவும் அணிந்திருக்கும் பட்சத்தில் விபத்தில் விலையில்லா உயிரினேன் காக்க முடியும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்,
செய்தியாளர் : காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!