தமிழகம்

சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து விபத்தை தடுக்க வலது புறமாக பேருந்து போது இரும்பு தடுப்பு வேலி மீது பேருந்து மோதி விபத்து லாரி ஓட்டுநர் காயம் பஸ் ஓட்டுனரின் முன்னெச்சரிக்கையால் பயணிகள் காயம் இன்றி தப்பினர்

89views
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டு இருந்தது அப்பொழுது நான்கு வழி சாலை சர்வீஸ் சாலையில் கப்பலூர் சிட்கோ கப்பலூர் ஸ்டேட் பாங்க் அருகே வரும்பொழுது சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் ஒன்று திடீரென வலது புறம் வாகனத்தை திருப்ப முயன்றது இதை முன்கூட்டியே கவனித்த அரசு பேருந்து ஓட்டுனர் பிரேக் அடித்துள்ளார் எனினும் கண்டெய்னர் லாரி நீளமானதுமாக இருந்ததால் பஸ் வருவதை கண்டவுடன் ரிவர்ஸ் எடுக்க முயன்றுள்ளார்.
எனினும் இதைக் கண்ட அரசு பேருந்து ஓட்டுநர் வாகனத்தை வலது புறமாக திருப்பும் முயன்ற போது லாரியின் பக்கவாட்டில் மோதியது இதில் லாரி ஓட்டுநர் லேசான காயம் அடைந்தார் எனினும் பேருந்து இரும்பு தடுப்பு சுவர் மீது மோதி நின்றது பேருந்து ஓட்டுநர் சாதர்த்தியதால் பயணிகள் அனைவரும் காயம் இன்றி உயிர் தப்பினர் சம்பவம் குறித்து திருமங்கலம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வீஸ் சாலைகளில் இதுபோன்று கனரக வாகனங்களை திடீர் திடீர் என நிறுத்துவதால் மேலும் எதிர் திசையில் வருவதாலும் இது போன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன் வைக்கின்றனர் சர்வீஸ் சாலைகளில் கனரக வாகனங்களை நிறுத்தாத வகையில் கனரகங்கள் நிறுத்தும் பகுதிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என காவல்துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!