தமிழகம்

தேனி மாவட்டத்தில் அலுவலகங்களில் தமிழில் பெயர் பலகை உள்ளதா தமிழில் கையெழுத்து இடுகின்றனரா மற்றும் கோப்புகளில் தமிழிலே பயன்படுத்தி வருகிறார்களா என தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக ஆய்வு

76views
தேனி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக தினமும் மூன்று அலுவலகங்களில் தமிழில் பெயர் பலகை உள்ளதா தமிழில் கையெழுத்து இடுகின்றனரா மற்றும் கோப்புகளில் தமிழிலே பயன்படுத்தி வருகிறார்களா என தேனி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் இளங்கோவன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார், அதன்படி இன்று மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம். உடன் பேரூராட்சி அலுவலர் சின்னச்சாமி இளநிலை உதவியாளர் உள்ளார்.
அவ்வாறு தமிழில் பயன்படுத்தவில்லையெனில் முதல் கட்டமாக அரசு பணியாளர்களுக்கு முதல் கட்ட எச்சரிக்கை விடப்படும். மேலும் அதே தவறை மீண்டும் பயன்படுத்தினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் இளங்கோவன் நம்மிடம் தெரிவித்தார்.
மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள வணிக வளாகங்களில் ஆங்கில சொற்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளன. ஆகவே அந்த நிறுவனங்களுக்கு துறை சார்ந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஐந்து இன்ச் தமிழிலும், மூன்று இன்ச் ஆங்கிலத்திலும், பிற மொழிகளில் இரண்டு இன்ச் அளவு தான் பெயர் பலகை இருக்க வேண்டும். இந்த ஆய்வு அரசு உத்தரவின் படி தமிழ் மொழியை மேம்படுத்தவும் வருங்காலங்களில் தமிழ் மொழியிலேயே பெயர் பலகை இருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தமிழக முதல்வர் உத்தரவுப்படி செயல்படுத்த வேண்டுமென கூறினார்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!