செய்திகள்விளையாட்டு

முதல் டி20 ஆட்டம் இங்கிலாந்து வெற்றி

136views

இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அங்கு தலா 3 டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை முடிந்த முதல் டி20 ஆட்டம் கார்டிப் நகரில் நடநத்து. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை 20ஓவரில் 7 விக்கெட்களை இழந்து 129ரன் எடுத்தது. அதிகபட்சமாக தசுன் ஷாங்கா 50ரன் எடுத்தார். அடில் ரஷீத், சாம் கரன் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து 130ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடியது.

அந்த அணி 17.1 ஒவரில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 130 ரன் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அந்த அணியின் ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்கமல் 68ரன் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!