543
தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வா
உயிர் மெய் எழுத்தின் இலக்கிய சோலையே
முத்தான
எழுத்துக்களை வித்தாக தந்த முத்தைய்யனே
முற்றும் உணர்ந்த தமிழ் மாமலையே
வள்ளலே
எங்களின்
மூத்தவனே
கவி பல செய்து
புவி ஆண்ட கவியரசே
படைத்த படைப்புகளோடு
பாரினிலே
தமிழ்த்தேரினில் பவணிவரும் மன்னவனே
பார்போற்றும்
பாரதி
பாரதிதாசனின்
பரம ரசிகனே
ஆயர்பாடி
கண்ணனின்
புல்லங்குழல் குயிலோசை நீங்கள்
என் நெஞ்சில் நீங்கா
இதய தேவனே
தமிழ் காவியமே
வண்ணமலர் ஓவியமே
அகிலம் போற்றும்
அவதார புருஷனே
உங்கள்
பிறந்த நாளில்
என் உயிர்
எழுத்தால்
கையோடு
மெய்யாக
அர்ச்சனை செய்து வணங்கி
மகிழ்கிறேன்..
-
ரகுபதி, துபாய்
add a comment