கட்டுரை

முத்துப்பட்டன் கதை : நூல் விமர்சனம்

24views
தொகுப்பாசிரியர்: பேராசிரியர் நா.வானமாமலை.
விமர்சனம் : வி.களத்தூர் கமால் பாஷா
‘அக்காள் தங்கைகளான பொம்மக்காவும் திம்மக்காவும் மணம் செய்து கொண்ட மணமகன் முத்துப்பட்டன்’. இது சாதி மறுப்பு திருமணம்.
சாதி மறுத்து திருமணம் செய்தால் என்ன ஆகும்?.
கொடூரக் கொலையை ‘கௌரவக் கொலை’ என்று தற்போது பேசப்படுவது, ஒரு கொடூரம்.
அந்தக் கொடூரம் அப்போதே நடந்திருக்கிறது.
இந்தக் கதை நெல்லை மாவட்டத்தில் வில்லுப்பாட்டாக இன்றும் பாடப்பட்டு வருவதாக நூலின் தொகுப்பாசிரியர் பேராசிரியர் நா. வானமாமலை கூறுகிறார்.
‘முத்துப்பட்டன் கதை’ என்ற இந்நூல் கதை நாயகனின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது‌.
தற்போது உலா வரும் இந்த முத்துப்பட்டனின் கதையில் சில முரண்பாடுகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.  காரணம் சாதி வெறி.

பேராசிரியர் நா.வானமாமலை
முதலில் முத்துப்பட்டன் தான் பொம்மக்காவையும் திம்மக்காவையும் விரும்பியதாகவும் அக்காள் தங்கைகள் முத்துப்பட்டனின் விருப்பத்தை ஏற்க வில்லை என்றும் கூறும் இந்தக்கதை, பிறகு பொம்மக்காவும் திம்மக்காவும் தான் முத்துப்பட்டனை விரும்பியதாகவும் பேசப்படுகிறது.
கதையை மாற்றி மாற்றி கூறப்படுவதின் நோக்கம் அவர்களின் சாதிப் பெருமை தாழ்ந்து போய் விடக்கூடாது என்பதற்காகத்தான் என்று நூலாசிரியர் பேராசிரியர் வானமாமலை தெளிவுபடுத்துகிறார்.  அந்தக் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் நடந்த வேறு சில கதைகளையும் ஒப்பீடு செய்து அந்த காலத்தில் தீண்டாமைகளும் சாதிவெறி உள்ளிட்டவைகள் இருந்ததாக ஒப்பீட்டுக் கதைகளையும் நமக்கு வாசிக்கத் தருகிறார் பேராசிரியர் நா.வானமாமலைஅவர்கள்.

பதிப்பாசிரியர் : தமிழ் இயலன்
இந்தக் கதையை பற்றி மேலும் கூறும்போது, ‘முத்துப்பட்டன் கதை’ என்பது வரலாற்று சமூக கதை பாடல். இது மனித உணர்வுகளின் மாண்பையும் சாதி வெறிக்கு எதிரான வீரத்தையும் பறைசாற்றுவதாக கூறுகிறார். ‘முத்துப்பட்டன் கதை’ நடந்த காலம் கிபி 1658 முதல் 1738 க்கும் இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அந்தக் காலகட்டத்தில் மனித உணர்வுகளை விட சாதிப் பெருமையே பெருமையாக பேசப்பட்டு இருக்கிறது. தீண்டாமை கொடுமை மிகக் கொடுமையாக நடந்திருக்கிறது. இந்நூலில், வட்டார வழக்கு மொழி, குறிப்பிட்ட காலத்தினுடைய பழக்க வழக்கம் பண்பாடு, ஆகியவைகளை குறித்த குறிப்பு தருகிறது. ஆய்வாளர்களுக்கும் கல்லூரி தமிழ் துறை மாணவர்களுக்கும் ஏற்ற நூல். திருநெல்வேலி பகுதியில் பாடப்படும் இந்த ‘முத்துப்பட்டன் கதை’யின் வில்லுப்பாட்டு, இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது.
வரலாற்றுக் குறிப்புகளை அறிந்து கொள்ள விரும்புவர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம்.
வெளியீடு: கண்ணம்மாள் பதிப்பகம் :
எண்.2 ஏஐ பிளாக், 4வது அவென்யூ, சாந்தி காலனி, அண்ணா நகர் சென்னை 40.
7 3 5 8 5 2 04 70 / 9442456667
விலை ரூபாய்: 140
பக்கம் 128.

வி.களத்தூர் கமால் பாஷா

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!