உலகம்உலகம்செய்திகள்

பட்டியலை வெளியிட்டது அமெரிக்கா – இலங்கையும் உள்ளடக்கம்

77views

25 மில்லியன் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இலங்கையையும் தெரிவு செய்துள்ளது. உலகெங்கிலும் உள்ள நாடுகளிடமிருந்து தடுப்பூசிகளுக்கான கோரிக்கைகளை அமெரிக்கா பெற்றுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அமெரிக்கா தனது நன்கொடை அளவுகளில் கால் பகுதியை நேரடியாக தேவைப்படும் நாடுகள், அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்க உதவியைக் கோரிய பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளது.

இலங்கை தனது அவசர தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அமெரிக்காவிடம் தடுப்பூசிகளை முறையாகக் கோரியிருந்தது. இதில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் 600,000 அளவுகளும் அடங்கும்.

இந்தநிலையில் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் நாட்டிற்கும் குறிப்பிட்ட ஒழுங்குமுறையின் கீழ் குறிப்பிட்ட தடுப்பூசிகள் மற்றும் தொகைகள் தீர்மானிக்கப்பட்டு பகிரப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. “தாம் இந்த தடுப்பூசி அளவுகளைப் பகிர்ந்துகொள்வது, உதவிகளைப் பெறவோ அல்லது சலுகைகளைப் பெறவோ அல்ல. உயிரைக் காப்பாற்றுவதற்கும், தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பதில் வழிநடத்துவதற்கும், உதாரண அடிப்படையில் இதனை பகிர்ந்து கொள்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறியுள்ளார்.

தான் பகிர்ந்து கொள்ளும் முதல் 25 மில்லியன் அளவுகளுக்கான உத்தேச ஒதுக்கீடு திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன்படி, இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மாலத்தீவுகள், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், பப்புவா நியூ கினியா, தைவான் மற்றும் பசிபிக் தீவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மில்லியன் கணக்கான அமெரிக்க தடுப்பூசிகளை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்வது அமெரிக்க அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!