உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 170,152,361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல நாடுகளில் கடுமையன ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மலேசியாவில் வரும் 14-ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மலேசியாவில் வெள்ளிக்கிழமை 8000 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடுமையான கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு வரும் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது என அந்நாட்டின் பிரதமர் முகாயிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு நாட்களில் அனைத்து தொழில் நடவடிக்கைகளால் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 7 தேதி வரை பகுதியளவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் இதுவரை 5,49,514- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.




