அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் போக்குவரத்து ஊழியர் ஒருவர் சக பணியாளர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தால் உயிர்கள் பறிபோவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமத்தை கடுமையாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது.
சான் ஜோஸ் என்ற இடத்தில் சாண்டா கிளாரா போக்குவரத்து ஆணையத்தில் பணிபுரிந்த வந்த ஊழியர் , தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சக பணியாளர்கள் மீது சரமாரியாக சுட்டார் . இதில் 8 பேர் உயிரிழந்தனர் .
துப்பாக்கியால் சுட்ட நபரும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் . அவரது பெயர் , என்ன காரணத்திற்காக துப்பாக்கி சூடுநடத்தினார் போன்ற விவரங்களை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.




