உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 11 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம்!

169views

ஸ்ரேல் – ஹமாஸ் குழு இடையே கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த போர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஹமாஸின்போர்நிறுத்தஉடன்படிக்கைக்குஇஸ்ரேல்ஒப்புதல்அளித்துள்ளது.

ஜெருசலேமில் உள்ள வழிபாட்டு தளத்தில் இஸ்ரேல் ராணுவத்திற்கும் – பாலஸ்தீனர்களுக்கும் இடையே கடந்த 10ஆம் தேதி மோதல் வெடித்தது. பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து, ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் காஸா முனை மீது இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது . ஒரு வாரத்திற்கும் மேலாக சண்டை நீடித்து வந்த நிலையில் , 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நலையில் இரு தரப்பினரும் சண்டையை நிறுத்த வேண்டுமென அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வந்தன. எகிப்து, கத்தார், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை சமரச முயற்சிகளில் ஈடுபட்டன.

இதன் பலனாக இஸ்ரேல் நாட்டுடன் பரஸ்பர மற்றும் தொடர்ச்சியான போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஹமாஸின் 11 நாள் போர்நிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!