இத்தாலியின் கால்பந்தாட்ட அணிகள் கலந்து கட்டி விளையாடும் சீரீ A லீகில் ஜுவென்டஸ் அணிக்காக தனது 100வது கோலை பதிவு செய்துள்ளார் ‘கோல் மன்னர்’ கிறிஸ்டியானோ ரொனால்டோ. மாடர்ன் டே கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னன் என போற்றப்படுபவர் அவர்.
Sassuolo அணிக்கு எதிரான போட்டியில் அதிவேகமாக 100 கோல் அடித்த வீரராகி உள்ளார் ரொனால்டோ. அதோடு மூன்று நாடுகளை சேர்ந்த மூன்று வெவ்வேறு கிளப்புகளுக்கு 100 கோல் அடித்துள்ளார் அவர். இதற்கு முன்னதாக லா லீகா (ரியல் மேட்ரிட்) மற்றும் பிரீமியர் லீக் (மான்செஸ்டர் யுனைடெட்) அணிகளுக்காக அவர் 100+ கோல்களை அடித்துள்ளார். தனது தாய்நாடான போர்சுகீஸ் அணிக்காகவும் சர்வதேச கால்பந்தாட்ட அரங்கில் 100க்கும் மேற்பட்ட கோல்களை பதிவு செய்துள்ளார்.
ஜுவென்டஸ் அணிக்காக தனது 131வது ஆட்டத்தில் 100வது கோலை ரொனால்டோ அடித்திருந்தார். இந்த ஆட்டத்தில் ஜுவென்டஸ் அணி 3 – 1 என கோல் கணக்கில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
89views
You Might Also Like
மாநில அளவிலான கைப்பந்து போட்டி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முன்னாள் மாணவர் கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி 27.01.25 மற்றும் 28.01.25 ஆகிய இரு தினங்கள்...
காட்பாடியில் 50 -வது ஜூனியர் கபடி போட்டிகள்
வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள அரசு உள்விளையாட்டு மைதானத்தில் 50 -வது ஜூனியர் கபடி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பரிசு கோப்பைகளை வழங்கினார். அருகில்...
காமன்வெல்த் ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் வேலூர் குடியாத்தம் வீரருக்கு 4 தங்கப் பதக்கம் !!
தென்னாப்ரிக்கா சன்சிட்டி நகரில் நடந்த காமன்வெல்த் ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட வேலூர் மாவட்டம் குடியாத்தம் சீவூர் கிராமத்தை சேர்ந்த ஆசிய வலுதூக்கும் வீரர் ஜெயமாருதி...
விளையாட்டு போட்டிகளில் வெற்றி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியர் 13.09.2024 அன்று இராமநாதபுரம், செய்யது அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற கிராஸ் கன்ட்ரி ரேஸ் (Cross...
முன்னாள் மாணவர்கள் நடத்திய கால்பந்து போட்டி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் 28.08.2024 மற்றும் 29.08.2024 ஆகிய இரண்டு நாட்கள் கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கால்பந்து போட்டி நடைபெற்றது....