178
யாரோ நீ
நான் தேடிய நீ
நீயில்லை…
நீயே தவறு
செய்துவிட்டு
நீயே உன்னை
மன்னித்துக்
கொள்வாயெனில்
பின்
நானெதற்க்கு?
அத்தனை
அன்பையும்
ஒரே நொடியில்
கரைத்துவிட
இப்பெருங்கடல் இருக்கையில்
உன்னில்
கரைந்து விட
ஏன் துடிக்கிறது
இச்சிறு இதயம்?
உன் விரல் தீண்டிய
கைகளை
ஏனோ நனைக்க
பிடிக்கவில்லை…
விடை பெறுகையில்
உணர்வுகளை
என் கையில் திணித்துவிட்டு
விரல்களை மட்டும்
பிரித்துக்கொண்டாய்….
சொல்லி தீரவதில்லை
உனக்கான வார்த்தைகள்
எப்பொழுதெல்லாம்
இறக்கத்தோன்றுகிறதோ
அப்பொழுதெல்லாம்
உன்னோடு
ஒரே ஒரு முறை மட்டும்
வாழ்ந்துவிட
தோன்றுகிறது..
எடுத்துவீசியெறிய
இருக்கக் கூடாத
இதயம்
வெளியே…
- சிவகங்கா