27views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
அது எப்போதும் அப்படித்தான்
எப்போதும் பூத்துக் கொண்டு
இருக்கவே முடியாது
காய்ப்பதும் கனிவதும் கூட
அப்படித்தான்…
ஒரு நேரம் பூக்கும்
ஒரு நேரம் காய்க்கும்
ஒரு நேரம் கனியும்
ஒரு நேரம் உதிரும்…
இயற்கையே இலையுதிர் காலமும்
வைத்திருக்கிறது…
நீங்கள் தேசமெங்கும்
மணம் பரப்பும்
மகிழ்ச்சி தரும் பூக்களும் அல்ல…
மக்கள் உள்ளங்களை
மருளச் செய்யும் கள்ளி முட்கள்…
குறிஞ்சிகளைப் போல
வேடமிட்டு வந்தீர்கள்
குரங்காட்டிகள் கைகளில்
முள்ளாகிப் போனீர்கள்…
இப்போது உங்களுக்கு
இலையுதிர்காலம்…
அற்ப விஷயங்களை எல்லாம்
பூதாகரமாக்கி மக்களை
மூளைச்சலவை செய்தீர்கள்…
மதப்பூச்சுக்குள் மாச்சரிங்களை
மட்டுமே வளர்த்தீர்கள்…
மற்றவர் இறையாலயங்கள்
உங்களுக்கு
கொள்ளைக் கூடாரங்கள் ஆகின…
பக்தி பகல் வேஷமானது…
அரசு விதிகள் எதிலும் அடங்காமல்
தேசமெங்கும் வலம் வந்தீர்கள்…
ரத யாத்திரைகளை
மக்களின் உயிர் குடிக்கும்
இரத்த யாத்திரையாக்கினீர்கள்…
ஒவ்வொரு முறையும்
மக்கள் உயிர் குடிக்க
உங்களுக்கு மதமோர் ஆயுதம்..
உங்கள் சின்னத்தனங்களால்
சினம் கொண்டவர்கள்
இப்போது சீறிப் பாய்கிறார்கள்…
ஒரு பெரிய வித்தியாசம்
இவர்கள் மதவாதிகள் அல்லர்
இளமை துடிப்புள்ள இளைஞர்கள்…
மதத்தின் பெயரால் மடக்குவதைப் போல
இவர்களை அடக்கவும் மடக்கவும் முடியாது…
எப்போதும் புரட்சிகள்
இளைஞர்களைக் கொண்டுதான்
எழுகின்றன…
இப்போது நீங்கள்
நிச்சயம் மடங்கித்தான் போவீர்கள்…
ஏனெனில் இயற்கையே
விதித்ததை போல
இது உங்களுக்கு இலையுதிர்காலம்…
நீங்கள் ஒரு போதும்
பூக்களாகவும் இல்லாததால்
உங்களால் இனி
பூக்கவும் முடியாது…
உங்கள் சாமிகளிடமே
கை வைத்து விட்டதால்
இனி அவர்களாலும் உங்களைக்
காக்கவும் முடியாது…
add a comment






