உலகம்

துபாய் ஈமான் தமிழ் அமைப்புக்கு துபாய் அரசின் சிறப்பு விருது .

35views
துபாயில் வாழும் இந்தியர்களுக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் துபாய் ஈமான் அமைப்புக்கு துபாய் அரசு எத்ரா சிறப்பு விருது வழங்கி ஈமான் அமைப்பை கௌரவப்படுத்தி உள்ளது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக துபாயில் இந்தியர்களுக்காக ஈமான் அமைப்பு செயல்பட்டு வருகிறது.
கல்வி உதவி, மருத்துவ உதவி செய்து வருகிறது. கொரோனா நேரத்தில் ஈமான் அமைப்பு மிகச்சிறந்த அளவில் செயல்பட்டு மருந்து மற்றும் உணவுகளை தேவையானவர்களுக்கு அளித்த சேவை மிகப் பெரிய அளவில் துபாயில் பாராட்டை பெற்றது.

தொடர்ந்து ஈமான் அமைப்பு, ரமலான் மாதங்களில் நோன்பாளிகளுக்கு தமிழகத்தின் பாரம்பரிய கஞ்சி தயாரித்து நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த முறையில் விநியோகம் செய்து சேவையாற்றி வருகிறது.  வருடத்திற்கு பலமுறை இரத்த தானம் செய்ய முழு ஏற்பாட்டையும் துபாய் அரசின் மருத்துவத்துறையோடு இணைந்து செயல்பட்டு வருகிறது.
ஏஜெண்டுகளால் ஏமாற்றி அழைத்து வரப்பட்டு விமான நிலையங்களில் தவித்தவர்களுக்கு உணவு மற்றும் தாய்நாடு திரும்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது.  வேலையும் உணவும் இன்றி தவிப்பவர்களுக்கு உணவு ஏற்பாடுகளை ஈமான் அமைப்பு செய்து வருகிறது.  மேலும் உடல்நலமின்றி துபாய் மருத்துவமனைகளில் தவிப்பவர்களுக்கு உதவுவதோடு, சிகிச்சை பலனின்றி துபாய் மருத்துமனை அல்லது தங்களது அறைகளிலேயே இறந்தவர்களை தாய் நாட்டிற்கு அனுப்பி வைக்கும் ஏற்பாட்டையும் செய்கிறது. சில சமயங்களில் மரணித்தவர்களை துபாயிலேயே அடக்கம் செய்யும் சூழல் இருந்தால் மத வேறுபாடின்றி அவரவர்களின் மத சடங்குகளை செய்து துபாயிலேயே அடக்கம் செய்யும் காரியங்களையும் துபாய் தமிழ் அமைப்பான ஈமான் செய்து வருகிறது.

துபாயில் உள்ள இந்திய துணை தூதரகத்தோடு இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை ஈமான் அமைப்பு செய்து வருவது பாராட்டத்தக்கது.  50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் துபாய் ஈமான் அமைப்பின் சேவையை பாராட்டி துபாய் அரசாங்கம் எத்ரா என்ற சிறப்பு விருதை வழங்கி, ஐம்பதாயிரம் திர்கம் (இந்திய மதிப்பிற்கு பன்னிரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்) அன்பளிப்பு அளித்து ஈமான் அமைப்பை கௌரவப்படுத்தி உள்ளது.
இது தமிழ் அமைப்பிற்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்.  இந்தச் சிறப்புமிக்க நிகழ்வில் ஈமான் அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம். ஹபீபுல்லாகான் அவர்கள் தலைமையில், பொதுச் செயலாளர் ஹமீது யாசின் அவர்கள் முன்னிலையில், நிர்வாகிகள் பங்கேற்றனர்.  பிளாக் துளிப் எஹ்யா காக்கா, கமால் காக்கா ஆகியோர் இவ்வமைப்பின் முக்கிய பிரமுகர்களாவர்.
வி.களத்தூர் கமால் பாஷா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!