தமிழகம்

காட்பாடி அடுத்த சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த இராம பக்தர்

19views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும்.
அதன் படி ஞாயிற்றுக்கிழமை 7-ம் தேதி காலை ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசத்துடன் வடைமாலை சாத்தப்பட்டுவிடேஷ பூஜைகள் காலை மற்றும் மாலையில் நடந்தது. பின் பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்யப்பட்டது.
அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!