தமிழகம்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 4,000 பேர் பிஎச்டி ஆய்வு படிப்பு படித்து வருவதாக பல்கலை.வேந்தர் ஜி.விசுவநாதன் தகவல்

116views
வேலூர் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: கல்வி மூலம்தான் ஒரு நாடு வளர முடியும், இந்திய மற்றும் தமிழகம் வளரவேண்டும். வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள 4 மாவட்டங்களை முன்மாதிரி மாவட்டமாக ஊக்குவிக்க கிராமபுற மாணவர்கள் ஸ்டார் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் 100 – க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வி அறக்கட்டளை மூலம் 10 ஆயிரம் பேருக்கு ரூ.12 கோடி உதவிதொகை வழங்கப்பட்டுள்ளது. உலகயளவில் போட்டியிட்டு சாதித்து எல்லோருக்கும் பயன்படவேண்டும் என்பதுதான் விஐடியின் நோக்கம், விஐடி பல்கலைக்கழகத்தில் 4,000 பேர் பிஎச்டி ஆய்வு படிப்பு மேற்கொண்டுவருகின்றனர். அனைவரும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று கூறினார்.
நிகழ்வின்போது துணைத் தலைவர் சேகர் விசுவநாதன், ரமணி பாலசுந்தரம், செயல் இயக்குனர் சந்தியா பெண்டரெட்டி, துணைவேந்தர் காஞ்சனாபாஸ்கரன், இணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி ஆகியோர் இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!