தமிழகம்

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணியில் பேருந்து நிற்காததைக் கண்டித்து பொது மக்கள் திடீர் சாலை மறியல்

99views
தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணியின் பேருந்து நிறுத்தமாக தூத்துக்குடி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், பொட்டலூரணி விலக்கு பேருந்து நிறுத்தம் விளங்கிவருகிறது. இந்த வழித்தடத்தில் ஆகப் பெரும்பான்மையாக இடைநில்லாப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொட்டலூரணி உள்ளிட்ட பல கிராமங்களின் பொதுமக்கள் அன்றாடம் பயணம் செய்யப் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை வரும், அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் 150 என்ற வழித்தடப் பேருந்துகளும் இப்போது பொட்டலூரணி விலக்கில் சரியாக நின்று செல்வதில்லை; தெய்வச்செயல்புரம் ஸ்டேஜ்க்குப் பதிவாக வாகைக்குளம் ஸ்டேஜ் போடத் தொடங்கிவிட்டனர். கடந்த நான்கு நாள்களாக இது தொடர்கிறது. இன்றும் பொட்டலூரணி பயணிக்கு வாகைக்குளம் ஸ்டேஜ் போட்டுவிட்டனர். எனவே பொதுமக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். பொட்டலூரணிக்குத் தனி ஸ்டேஜ் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி கோட்டாட்சியர்அரசுப் போக்குவரத்துக் கழகத் துணை மேலாளர், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பொட்டலூரணி விலக்கு நிறுத்தத்திற்கு மூன்று நாள்களுக்குள் முறையான ஆணை மூலம் தனி ஸ்டேஜ் வழங்குவதாக எழுந்துப்பூர்வமாக உறுதியளித்தனர். மூன்று நாள்களுக்குள் ஆணை வழங்காவிட்டால் திங்கள் கிழமை மீண்டும் சாலை மறியல் செய்வோம் என்று அறிவித்துவிட்டு, பொது மக்கள் களைந்து சென்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!