தமிழகம்

வேலூர் அடுத்த வள்ளிமலை மற்றும் இரத்தினகிரி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு தெப்ப திருவிழா ஏரளமான பக்தர்கள் பரவசம்

221views
வேலூர் அருகே உள்ள பாலமுருகன் திருக்கோயிலில் ஆடி மாத கிருத்திகை முன்னிட்டு பரணி காவடி, கிருத்திகை காவடி எடுத்து வந்து பக்தர்கள் முருகன், வள்ளி, தெய்வானையை தரிசனம் செய்தனர். பிறகு இரவில் அங்குள்ள ஆறுகோண வடிவில் உள்ள தாமரைகுளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி வலம் வந்தார்.ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாலமுருகன் அடிமை, செயல் அலுவலர் சங்கர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர். அதேப்போல் காட்பாடி அடுத்தவள்ளிமலை ஸ்ரீசுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பரணி காவடி, ஆடி கிருத்திருகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகன், வள்ளி, தெய்வானையை தரிசனம் செய்தனர். இரவு அங்குள்ள குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் முருகன்,வள்ளிதெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை செயல் அலுவலர் திருநாவுக்கரசு, எழுத்தர்ராஜ்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!