தமிழகம்

போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

171views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு போதைப்பொருள் பயன்படுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி 01.08.2025 அன்று நடைபெற்றது. கல்லூரி தேசிய மாணவர் படை இணை அதிகாரி அப்துல் முத்தலிப் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையேற்றார். வணிகவியல் துறை, இணைப்பேராசிரியர் நைனா முகம்மது வாழ்த்துரை வழங்கினார். உதவிப்பேராசிரியர் சம்சுதீன் இப்ராஹிம் போதைப்பொருள் பயன்படுத்துவதினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். ஹிமாச்சல் பிரதேசம், மணாலியில் மலை ஏறுதல் பயிற்சி பெற்ற தேசிய மாணவர் படை மாணவர்களை கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் வாழ்த்தினார். உதவிப்பேராசிரியர் அப்பாஸ் நன்றி கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!