தமிழகம்

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் போராட்ட ஆயத்த கூட்டம் வேலூரில் நடந்தது

128views
வேலூர் ஏலகிரி அரங்கில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் போராட்ட ஆயத்த கூட்டம் நடந்தது. 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு16 சதவீதத்துக்கு குறைவா ஊதிய உயர்வு வழங்க கூடாது என தமிழக அரசின் ஒப்பந்தத்தை பின்பற்றாமல் தன்னிச்சையாகஊதிய உயர்வை குறைத்து வழங்கிய தொழிலாளர் விரோத நடவடிக்கையை கைவிட்டு 2025-26 ஊதிய உயர்வைமுறையாக வழங்க வேண்டும், சட்டவிரோத12 மணி வேலை நேரத்தை கைவிட்டு 8 மணி நேர 3 ஷிப்ட் முறையை நடைமுறை படுத்த EMRI – GHS முன்வர வேண்டும்…இல்லை எனில் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபரில் வேலைநிறுத்தம் செய்யப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் இந்த போராட்ட ஆயத்த கூட்டம் நடந்தது. இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட தொழிலாளர் சங்கத்தினர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!