தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி சேவூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி !!

116views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் தனியார் மண்டபத்தில் சேவூர் மற்றும் அரும்பருதி கிராம பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த கிராம மக்களுக்காக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமில் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன. புதிய மின்னணு குடும்ப அட்டையில் உறுப்பினர் சேர்க்ககோரிய மனு அளித்த பயனாளிக்கு ஆணையை ஆட்சியர் சுப்புலெட்சுமி வழங்கினார். அருகில் தாசில்தார் ஜெகதீஸ்வரன், பிடிஓ நந்தகுமார், டிஎஸ்ஓ திவ்யா, 1-வது மாநகராட்சி மண்டல தலைவர் புஷ்பலதா,சேவூர் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதிராஜேந்திரன், பல்துறை அலுவலர்கள், பயனாளிகள், உள்ளாட்சி. பிரதிநிதிகள் என பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!