தமிழகம்

அருள்மிகு புத்துக் கோயில் புத்துமாரியம்மன் திருக்கோயில் 2 மாத பக்தர்கள் ரூ.9 லட்சத்து 82 ஆயிரம் காணிக்கை !!

88views
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயிலில் சிறப்புமிக்க அருள்மிகு புத்துமாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த சென்னை – பெங்களூரு 6 வழிச்சாலையில் அமைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பக்தர்களும் இந்த கோயில் நின்று வணங்கி காணிக்கை செலுத்திவிட்டு செல்வர். 2025 ஆண்டு மே மற்றும் ஜூன் மாதத்தில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை அப்பகுதியில் உள்ள இந்து அறநிலைத்துறை அலுவலகத்தில் துணை ஆணையர் கருணாநிதி மேற்பார்வையில் நடந்தது. இதில் 9 லட்சத்து 82 ஆயிரத்து 924 ரூபாய் பணமாகவும். 52 . கிராம் தங்கம். 79.300கிராம் வெள்ளி ஆகியவை பெறப்பட்டது. இதில் கோயில் செயல் அலுவலர் சண்முகம், வாணியம்பாடி ஆய்வாளர் நரசிம்மமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!